டிஜிட்டல் திண்ணை: அடிக்கப் பாய்ந்த சிவி சண்முகம்.. திருப்பி தாக்க முயற்சித்த எடப்பாடி.. எகிறிய எஸ்பி வேலுமணி.. இபிஎஸ் ‘அத்தியாயம்’ ஓவர்? அதிமுகவில் என்ன நடக்கிறது?

Published On:

| By Mathi

Digital Thinnai AIADMK

வைஃபை ஆன் செய்ததும், “நீ போட்டு நானும் போட்டு என்னாச்சு நம்ம ஓட்டு”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.

என்னய்யா.. ’விஜய் சர்க்கார்’ அமைஞ்சிருச்சு..

ஆமாய்யா.. எது நடக்க வேண்டுமோ அது நன்றாகவே நடக்கிறது.. விஜய் ஆட்சியின் சகாப்தம் தொடங்கி இருக்கு..

ADVERTISEMENT

அதே நேரத்துல அதிமுகவில எடப்பாடியோட சகாப்தம் கேள்விக்குறியாகிட்டே இருக்கே..

என்னதான் நடக்குதாம் அதிமுகவில்?

விஜய் ஆட்சி அமைக்க முடியாம இருந்தப்ப திருமாவளவனை சிஎம் ஆக்குறதுன்னு திமுக ஒரு ப்ளான் போட்டுச்சு.. இதுக்கு முதல்ல எடப்பாடியும் ஓகே சொல்லி இருந்தாரு.. அதிமுக கூட்டணியில இருக்கும் தினகரன், அன்புமணி எல்லாமே ஓகேன்னு சொல்லிட்டாங்க…

ADVERTISEMENT

இதுக்காகத்தான் நேத்து அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்துச்சு.. இதுல 47 எம்.எல்.ஏக்கள் கலந்துகிட்டாங்க.. உள்ளே போறப்பவே எல்லாருடைய செல்போனையும் வெளியிலேயே வாங்கி வெச்சுட்டாங்க..

சிவி சண்முகம்தான் திருமா மேட்டரை பேசத் தொடங்கினாரு.. அவரு பேசும் போது, “உங்களை முதல்வராக்கனும்னு திமுக முதல்ல சொன்னது.. அப்புறமா திருமாவை முதல்வராக்கனும்னு சொல்லுது”ன்னு திருமாவுக்கும் ஆதரவு எடப்பாடிக்கும் ஆதரவுன்னு ரெண்டு டோனில்தான் பேசிகிட்டு இருந்தார்..

ADVERTISEMENT

அப்ப டக்குன்னு எடப்பாடி பழனிசாமி, “அதெல்லாம் முடியாது.. நான்தான் முதல்வரா இருப்பேன்.. திருமாவை சிஎம்மாக ஏத்துக்க முடியாது.. அவரு வேணும்னா துணை முதல்வரா இருக்கட்டும்ன்னு சொன்னாரு..

அப்ப எஸ்பி வேலுமணி, விஜய்பாஸ்கர் எல்லாம், “நாம தேர்தல்ல நிறைய செல்வு செஞ்சிருக்கோம்.. பலருக்கும் கடன் எல்லாம் இருக்குது.. இப்போதைக்கு நமக்கு பவர்தான் தேவை.. பவர் இல்லாம நாம எதுவும் செய்ய முடியாது..அதனால முதல்ல ஆட்சி அமைச்சுடுவோம்.. திருமா முதல்வராக இருக்கட்டும்..அப்புறமா என்ன ஏதுன்னு பேசிக்குவோம்”னு சொல்லிப் பார்த்தாங்க..

ஆனாலும் எடப்பாடி பழனிசாமி பிடிவாதமா இருந்தாரு.. இப்படியே பேசிகிட்டு இருக்கும் போது மெல்ல வாக்குவாதமா ஆரம்பிச்சு ஆள் ஆளுக்கு ரொம்ப சவுண்டா பேசுனாங்க..

சிவி சண்முகம், எடப்பாடி, எஸ்பி வேலுமணி மூணு பேருமே யாரால எத்தனை எம்.எல்.ஏ.க்களை ஜெயிக்க வைக்க முடிஞ்சதுன்னு விவாதம் பண்ண அதுவே ஆக்ரோஷமாகிடுச்சு..

ஒரு கட்டத்துல சட்டுன்னு சேரை தள்ளிவிட்டு எந்திரிச்ச சிவி சண்முகம், எடப்பாடியை நோக்கி அடிக்கிற மாதிரி கையை ஓங்கிட்டாரு.. டக்குன்னு எடப்பாடியும் பதிலுக்கு கையை ஓங்கி திருப்பி அடிக்கிற மாதிரி போக ஒரே பதற்றமாகிடுச்சு.. நிலைமை ரொம்பவே விபரீதமாகிடுமோன்னு பயந்து போன மத்தவங்க ரெண்டு பேரையும் தடுத்து விலக்கிவிட்டு இருந்தாங்க.. அப்ப அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சிவி சண்முகத்துக்கு பக்கத்துல வந்து சமாதானப்படுத்துற மாதிரி பேச அவரையும் சத்தம் போட்டுட்டாரு சிவிஎஸ்…

இந்த களேபரத்தோட எம்.எல்.ஏக்கள் கூட்டம் கலைஞ்சது..

இதுக்கு பிறகுதான் எடப்பாடி பழனிசாமி, புதிய ஆட்சிக்கு வாழ்த்துன்னு ட்வீட் போட.. திருமாவை சிஎம் ஆக்குற ப்ளானும் முடிஞ்சு போச்சு…அங்கிட்டு விஜய்க்கு திருமாவும் ஆதரவு லெட்டர் கொடுத்துட்டாரு..

இதை பத்தி நேத்து கூட்டத்துல கலந்துகிட்ட அதிமுக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “அதிமுக மறுபடியும் ரெண்டா உடைஞ்சு போகுது.. எடப்பாடியோட பொதுச்செயலாளர் பதவிக்கு ஆபத்தும் வந்துருச்சு.. இனி அதிமுகவோட எம்.எல்.ஏக்கள் கூட்டமா இருந்தாலும் பொதுக்குழுவா இருந்தாலும் ரொம்ப களேபரமாதான் இருக்கும்.. நிலைமை ரொம்பவே சிக்கலாதான் இருக்கு”ன்னு சொல்றாங்கய்யா என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகதுறை அனுபவம், ’தினமணி’, ‘இன்தாம்’, ஆஸ்திரேலியா தமிழ் வானொலி, சன் நியூஸ், ஒன் இந்தியா தமிழில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share