வைஃபை ஆன் செய்ததும், “ஓட்டம், ஓட்டம், எங்கும் ஓட்டம்! பின் தொடரும் நிழல்களைத் தாண்டி ஓட்டம்!”னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னங்க ப்ரோ.. பாட்டு புதுசா இருக்கே..
ஆமாங்க ப்ரோ.. நடக்கிற சம்பவங்களை யோச்சிச்சேன்.. தானா அருவி மாதிரி வார்த்தைகள் கொட்டிடுச்சு..
அப்படி என்ன சம்பவங்கள் ப்ரோ..
அதான் கரூர், நாமக்கல்லு ”கரூர் கம்பெனி” ஏரியாவே அல்லோகலப்படுதே..
”சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரும் ஆபரேஷனை செந்தில் பாலாஜி டீம் தொடங்கிச்சு.. தவெக எம்.எல்.ஏக்கள்கிட்ட பேசுச்சு.. ஆனா உளவுத்துறை காதுக்கு போனது ஆபரேஷன் ஸ்டாப்”ன்னு நாமதான் போன ஜூன் 23-ந் தேதியே சொன்னோம்..
அதோட பாலோ அஃப்தான் இந்த கேஸ் ஓபனா வெட்டவெளிச்சமாகிடுச்சு.. இந்த கேஸில இன்னைக்கு வரைக்கும் 9 பேரை அரெஸ்ட் செஞ்சுட்டாங்க.. இவங்க எல்லாமே திமுக மாஜி செந்திலபாலாஜிக்கு வலது இடதுமா இருந்த சோ கால்ட் ‘கரூர் கம்பெனி’ ஆட்கள்தானாம்..
சரிங்க ப்ரோ.. இந்த கேஸ்ல அடுத்த ஸ்டேஜ் என்னவாம்?
இப்போதைக்கு அடுத்தடுத்து அரெஸ்ட்னு தீவிரமா இருக்கிற போலீஸ், கேஸின் சூத்ரதாரிகள்னு சொல்லப்படுகிற செந்தில் பாலாஜியையும் அவரோட தம்பி அசோக்குமாரையும் வலைவீசி தேடுதாம்.
இதை பத்தி போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசுனப்ப, “தன்னோட ஆட்சியை கவிழ்க்க சதி செஞ்ச கேஸ் அப்படிங்கிறதால சிஎம் விஜய் ரொம்ப சீரியஸா இருக்கிறார்.. ஒவ்வொரு டைமும் கேஸோட அப்டேட்டை கேட்டு கேட்டு வாங்கிட்டு இருக்காரு.. இந்த கேஸில சம்பந்தப்பட்ட யாரையும் விட்டுடக் கூடாது.. செந்தில் பாலாஜி, அசோக்குமார் எல்லாத்தையும் தூக்குங்குன்னு கறாரா ஆர்டர் போட்டிருக்கார்.. அதனாலதான் வலைவீசி தேடிகிட்டு இருக்கிறோம்”ன்னு சொல்றாங்க..
செந்தில் பாலாஜி தரப்புல விசாரிச்சப்ப, “இந்த கேஸ் ரொம்பவே சீரியசானது.. அதனால வெளியே தலைமறைவா இருந்துகிட்டே ஹை கோர்ட்ல முன்ஜாமீன் கேட்கலாம்னு லாயர்ஸ்கிட்ட பேசிகிட்டு இருக்காங்க.. ஒருவேளை ஹைகோர்ட் முன்ஜாமீன் மனுவை டிஸ்மிஸ் செஞ்சுட்டா, சுப்ரீம்கோர்ட் போகலாம்.. அங்க என்ன மாதிரி லீகல் பாயிண்ட்ஸ் வெச்சு முன்ஜாமீன் வாங்கலாம்னு ஆலோசனை நடத்திகிட்டு இருக்காங்க..”ன்னு சொல்றாங்க ப்ரோ..
திமுக தரப்புல பேசுனப்ப, “செந்தில் பாலாஜி செய்யுற எல்லாமே கட்சிக்குதான் சிக்கலாகுது.. இதுல கட்சி தலைமை என்ன சொல்ல முடியும்.. அவர் கேஸ்.. அவருதான் பார்த்துக்கனும் இல்லையா”ன்னு சொல்றாங்க..
இந்த கேஸை சிஎம் விஜய் சும்மா விடுறதா இல்லை.. செந்தில் பாலாஜிக்கு இது தெரியும்ங்கிறதால தப்பி ஓடி தலைமறைவாகிட்டாருன்னு சொல்றாங்க.. ஏற்கனவே தம்பி அசோக்குமார் ஒரு பக்கம்.. இப்ப அண்ணன் செந்தில் பாலாஜி இன்னொரு பக்கம் தலைமறைவு.. இவங்க அரெஸ்ட் ஆகுற வரைக்கும் அல்லது கோர்ட்ல ஆர்டர் வர்ற வரைக்கும் பரபரப்புதான் ப்ரோ என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டியபடியே ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
