ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மதிமுக நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியில் இருந்து விலகி உள்ளனர். மேலும் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் மதிமுக நிர்வாகிகள், திமுகவில் இணைந்தனர்.


திமுக வெளியிட்ட அறிக்கையில், மு.க.ஸ்டாலின் முன்னிலையில், இன்று (02.07.2026) காலை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில், ம.தி.மு.க.வைச் சேர்ந்த
- ஈரோடு தெற்கு மாவட்ட முன்னாள் செயலாளர் மு.கோபால்
- தலைமைச் செயற்குழு முன்னாள் உறுப்பினர் பி.வி.செல்வராஜ்
- ஈரோடு நாடாளுமன்ற தொகுதி இணையதள அமைப்பாளர் கபிலன் கணேசமூர்த்தி (முன்னாள் எம்பி கணேசமூர்த்தி மகன்)
- மாவட்ட முன்னாள் துணைச் செயலாளர் எஸ்.நல்லசிவம்
- மொடக்குறிச்சி ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னாள் செயலாளர் வி.பி.ஈஸ்வரமூர்த்தி,
- முன்னாள் அவைத்தலைவர் எஸ்.லோகநாதன்
- முன்னாள் பொருளாளர் டி.சிவசுப்பிரமணி
- கொடுமுடி ஒன்றிய முன்னாள் செயலாளர் பி.துரைசாமி
- கொடுமுடி பேரூர் முன்னாள் செயலாளர் டி.பாலசுப்பிரமணியம்
- மாவட்ட தொண்டர் அணி முன்னாள் அமைப்பாளர் வி.பி.பழனிவேல்ராஜ்
- மாவட்ட இளைஞர் அணி முன்னாள் அமைப்பாளர்கள் கே.ஜெயபிரகாஷ், த.வினோத்குமார்
- ஈரோடு மாநகர் மாவட்ட பொருளாளர் குணசேகரன்
- ஈரோடு மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் கதிர்வேல்
- வெளியீட்டு அணி மாநில துணைச் செயலாளர் நாகராஜ்
- ஈரோடு மாநகர் வீரமணி ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.

இதேபோல திருப்பூர் கிழக்கு மாவட்டம், காங்கயம் நகரச் செயலாளர் ஏ.வெங்கடேஷ்வரன் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் ப.ராசேந்திரன் ஆகியோர் தி.மு.க.வில் இணைந்தனர்.
