தவெகவில் 4 எம்.எல்.ஏ.க்களுக்குப் புதிய பொறுப்பு – விஜய் உத்தரவு

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோடு ச. ஜோசப் விஜய் ஆட்சி அமைத்தார். இந்நிலையில், தவெகவில் நிர்வாக வசதிக்காக அமைப்பு ரீதியாக புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டு, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், பின்வரும் 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன:

ADVERTISEMENT
  • காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம்
  • திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டம்
  • திருநெல்வேலி மத்திய மாவட்டம்
  • திருநெல்வேலி வடக்கு மாவட்டம்
  • திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டம்

புதிய நிர்வாகிகள் விபரம்:

  • உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எஸ். முருகன், திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், திருவண்ணாமலை வடமேற்கு மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாளையங்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருநெல்வேலி மத்திய மாவட்டச் செயலாளராக மரியை ஜான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள முதல்வர் விஜய் எக்ஸ் பதிவில், “புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share