வைஃபை ஆன் செய்ததும், “வலது பக்கம் ஒரு பாதை, இடது பக்கம் ஒரு பாதை
விதி செய்த சதி இதுவோ”என ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்..
என்னங்க ப்ரோ.. அதான் தவெகவில சாரை சாரையாக சேர்ந்துகிட்டு இருக்காங்க.. இன்னும் தத்தளிச்சுகிட்டு இருக்கிறது யாராம்?
ஆமாங்க ப்ரோ.. அதிமுகவோட மாஜி மினிஸ்டர்ஸான ”விஜயபாஸ்கர்கள்” கரூர், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூரில இருந்து நிறைய பேரை அழைச்சுட்டு வந்து தவெகவில இன்னைக்கு இணைஞ்சுட்டாங்க..
அதேநேரத்துல இன்னமும் அதிமுகவில கலகம் ஓயவும் இல்லை.. நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி ,தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணா ரெட்டின்னு எல்லாரும் சேர்ந்து எடப்பாடிக்கு நேத்து ஒரு லெட்டர் அனுப்பிச்சிருக்காங்க.
அதுல, “கட்சி பதவிகளில் இருந்து விலக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் அவர்கள் வகித்து வந்த பதவிகளை தரலை. நீங்க உங்க விருப்பப்படி பொறுப்பு போட்டிருக்கிறீங்க.. நீங்க கொடுத்த பதவி எல்லாம் வேண்டாம்.. நாங்க கட்சி உறுப்பினரா மட்டும் இருக்கிறோம்”னு சொல்லி இருக்காங்க..
இதை பத்தி எஸ்பி வேலுமணிகிட்ட ரிப்போர்ட்டர்ஸ் கேட்டதுக்கு, “நாங்கதான் லெட்டரில் உறுப்பினரா இருக்கிறோம்னு சொல்லிட்டோம்.. அதுதான் எங்க நிலைப்பாடு.. பொதுவா கட்சி மகளிர் அணி கூட்டத்துக்கு சீனியர்ஸ்னு கூப்பிடுவாங்க. எங்களை நேத்து கூப்பிடலை.. ஏன்னு தெரியலை”ன்னும் சொன்னார்.
சரிங்க ப்ரோ.. எஸ்பி வேலுமணி என்ன முடிவு எடுக்க போறார்? அவரும் எல்லாரையும் மாதிரி தவெக பக்கம் ஜம்ப் ஆக போகிறாரா?
எஸ்பி வேலுமணியைப் பொறுத்தவரைக்கும் இந்த விஷயத்துல எந்த முடிவும் தற்போது வரைக்கும் எடுக்கலைன்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க.. அவங்ககிட்ட பேசுனப்ப, “25 எம்.எல்.ஏ.க்களுடன் தவெக ஆட்சிக்கு எஸ்பி வேலுமணி அணி ஆதரவு கொடுத்துச்சு. சிஎம் விஜய்யே நேரில வந்து எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் எல்லாத்தையும் சந்திச்சு பேசுனார். எஸ்பி வேலுமணிகிட்ட விஜய் தனியா பேசும்போது கூட நம்பிக்கையா சொல்லி இருந்தார். அதனால எப்படியும் 4,5 பேருக்கு மந்திரி பதவி கிடைக்கும்னுதான் எதிர்பார்த்தாங்க. ஆனா கடைசியில அமைச்சர் பதவி இல்லைன்னு சொல்லி கழற்றிவிட்டாங்க.. எஸ்பி வேலுமணி டீம்-க்கு ரொம்பவே செட் பேக் ஆகிடுச்சு.. அதனால மறுபடியும் அதே மாதிரி ஒரு மூவ் எடுக்கனுமா? விஜய்யை நம்பி மறுபடியும் போறது சரியா இருக்குமா?ன்னு ரொம்பவே யோசிக்கிறார் எஸ்பி வேலுமணி.
அதோட, தவெகவில சேர்ந்துட்டா மாநில அளவில பொறுப்பு கிடைக்குமா? அப்படி கிடைச்சாலும் எதிர்காலத்துக்கு அது சரியா வருமா?ன்னு எல்லாருகிட்டேயும் ஒப்பீனியன் கேட்டு டிஸ்கஷன் செய்யறாரு.
அதே மாதிரி, ஏன் தவெகவுக்குதான் போகனுமா? பாஜக இருக்குதுல்ல.. பாஜகவில மாநில தலைவர் பதவி கொடுக்கிறாங்கன்னா அங்க போகலாம்தானே.. இனி வர்ற எலக்ஷனிலும் மோடிதான் பிஎம் ஆக வருவாரு. நேஷனல் பார்ட்டியில ஸ்டேட் பிரசிடென்ட்டா இருக்கிறது எதிர்காலத்துக்கு நல்லதுதானே. அப்படி ஏன் நாம முயற்சிக்கக் கூடாது? அது சரியா வருமா?ன்னும் இன்னொரு டிஸ்கஷனையும் எஸ்பி வேலுமணி நடத்திகிட்டுதான் இருக்கிறார்”ன்னு சொல்றாங்க ப்ரோ..
ஓஹோ.. எஸ்பி வேலுமணியோட மூவ்வை பத்தி பாஜக என்ன நினைக்குதாம்?
பாஜக சீனியர்ஸ்கிட்ட பேசுனப்ப, “தமிழ்நாட்டுல அதிமுகவோட கூட்டணியில இருக்கிறோம்.. இப்ப எஸ்பி வேலுமணி டீமை நாங்க சேர்த்துகிட்டா நிச்சயமாக அதிமுகவோட கூட்டணி முறிஞ்சு போக சான்ஸ் இருக்கு.
இங்க ஸ்டேட்ல எங்களுக்கு சரியான பார்ட்டனர் யாரும் இல்லை. இதை எல்லாம் டெல்லி மேலிடம் கால்குலேட் பண்ணும் இல்லைங்களா? இன்னொரு விஷயமும் இருக்குங்க. பீகார் போன்ற மத்த மாநிலங்களில் கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் அவங்க எம்.எல்.ஏ,க்களை கட்சி தலைவர்களை பாஜக சேர்க்கவும் செஞ்சிருக்கு. கூட்டணிக்குள்ள பிரச்சனை வராத அளவுக்கு மேனேஜ் பண்ணியிருக்கு அப்படிங்கிறதையும் கவனிக்கனும்” என புதிர் போடுறாங்க ப்ரோ என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆஃப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
