ஜனநாயகன் தயாரிப்பாளருடன் ஆளுநரை விஜய் சந்தித்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று மாலை ஆளுநர் மாளிகைக்கு சென்றார் தவெக தலைவர் விஜய்.
அங்கு ஆளுநர் அர்லேகருக்கு பூங்கொத்து, சால்வை அணிவித்து மரியாதை தெரிவித்த விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
இந்த சந்திப்பின் போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளர் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவன தலைவர் வெங்கட நாராயணன் உடன் இருந்தார். குறிப்பாக ஆளுநருக்கு அருகில் அவர் நின்றிருந்தார்.
ஆந்திர பிரதேச கிரானைட் தொழிலதிபர் விஷ்ணு ரெட்டியும் உடன் இருந்தது கவனம் பெற்றுள்ளது. இவர்கள் இருவரும் தவெகவில் இருக்கிறார்களா? ஏன் முக்கியமான சந்திப்பில் விஜய்யுடன் செல்ல வேண்டும் என்று கேள்விகள் எழுந்துள்ளன.
