சிபிஐ, சிபிஎம் கட்சி மாநில செயலாளர்களைச் சந்தித்து விஜய் நன்றி கூறியுள்ளார்.
சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தவெக பெரும்பான்மை கிடைக்காமல் திணறி வந்தது.
இந்தநிலையில் தவெகவுக்கு (108-1 =107), சிபிஎம்(2), சிபிஐ(2), காங்கிரஸ்(5), ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்தசூழலில் இன்று மாலை மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
தொடர்ந்து சிபிஐ, சிபிஎம் கட்சி அலுவலகங்களுக்கு சென்ற விஜய் தவெகவுக்கு ஆதரவுத் தெரிவித்த இடதுசாரி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்ற விஜய், அங்கு மறைந்த நல்லக்கண்ணு புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். பின்னர் சிபிஐ மாநில செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர் சிபிஎம் அலுவலகத்துக்கு சென்ற விஜய்யை பெ.சண்முகம் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தொடர்ந்து தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய், அங்கிருந்து புறப்பட்டார்.










