பாமக தலைவர் அன்புமணியை நேரில் சந்தித்த விஜய்

Published On:

| By Pandeeswari Gurusamy

Anbuamani

தமிழக சட்டசபைத் தேர்தலில்108 தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம், காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதல்வராக நேற்று விஜய் பதவியேற்றுக் கொண்டார். இன்று பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியின் எம்எல்ஏவாக தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைத் தொடர்ந்து 232 எம்எல்ஏக்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

எம்எல்ஏவாக இன்று பதவியேற்றுக் கொண்ட முதல்வர் விஜய், அரசியல் நாகரீகத்தின் வெளிப்பாடாக எதிர்க்கட்சித் தலைவரின் வீட்டிற்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார். தமிழக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து மரியாதை நிமித்தமாக பேசினார். பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவையும் அவரது வீட்டில் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து முதல்வர் விஜய், நீலாங்கரையில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இல்லத்திற்கு நேரில் சென்றார். முதல்வர் விஜய்யை அன்புமணி ராமதாஸும், அவரது மனைவி எம்எல்ஏ சௌமியா அன்புமணி ஆகியோர் வாசலுக்கு வந்து வரவேற்றனர். பின்னர் அன்புமணி ராமதாஸ் குடும்ப உறுப்பினர்கள் முதல்வர் விஜயைச் சந்தித்து வாழ்த்துக் கூறினர். இதைத்தொடர்ந்து அன்புமணி குடும்பத்தினர் முதல்வருடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share