சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி தரப்பை சந்தித்த விஜய்

Published On:

| By Kavi

ஐயுஎம்எல், காங்கிரஸ் அலுவலகத்தை தொடர்ந்து சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சரும் எம்.எல்.ஏ.வுமான சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு முதல்வர் விஜய் சென்றார்.

அங்கு எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகம், காமராஜ், தங்கமணி, சி விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோரும் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

அப்போது முன்னாள் அமைச்சர்களுக்கு சால்வை அணிவித்தார் விஜய். சிவி சண்முகம் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை விஜய்க்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் முதல்வருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினர்.

அப்போது பண்ருட்டி எம்.எல்.ஏ மோகன் தோளில் தட்டி, ’நான் இருக்கிறேன்’ என நம்பிக்கை தெரிவித்தார்.

ADVERTISEMENT

இந்த பண்ருட்டி மோகன் தான் நேற்று எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்கும் போது சட்டப்பேரவையில் இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பார்த்து கண்கலங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share