தவெக ஆட்சிக்கு அதிமுக ஆதரவு- எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தை சந்திக்கும் விஜய்- எடப்பாடியிடமும் வாழ்த்து பெறுகிறார்!

Published On:

| By Mathi

தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ள எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணியினரை முதல்வர் விஜய் இன்று பிற்பகல் 2 மணிக்கு சந்தித்து பேசுகிறார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரான முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து பெற உள்ளார்.

முதல்வராக பதவியேற்ற விஜய் அதே நாளில் சென்னை பெரியார் திடலுக்கு சென்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பெரியார் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினார்.

ADVERTISEMENT

இதனைத் தொடர்ந்து நேற்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரையும் முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்துள்ள அதிமுக எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் அணியினரை இன்று பிற்பகல் 2 மணிக்கு முதல்வர் விஜய் சந்தித்து பேசுகிறார்.

ADVERTISEMENT

இச்சந்திப்பைத் தொடர்ந்து முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியையும் சந்தித்து முதல்வர் விஜய் வாழ்த்துகளைப் பெற இருக்கிறார்.

மேலும் விசிக தலைவர் தொல். திருமாவளவனையும் இன்று பிற்பகல் முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து பெறுகிறார்.

ADVERTISEMENT

ஆட்சிக்கு ஆதரவு தருவதாக அறிவித்த அன்றே சிபிஐ செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம் செயலாலர் சண்முகம் ஆகியோரை அவர்களது கட்சி அலுவலகங்களுக்கு சென்று விஜய் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share