விஜய் ஆட்சிக்கு அதிமுக எஸ்பி வேலுமணி அணி ஆதரவு- சிவி சண்முகம் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By Mathi

AIADMK SPV Faction

தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி அணி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை தருவதாக அக்கட்சியின் மூத்த தலைவர் சிவி சண்முகம் அறிவித்துள்ளார்.

சென்னையில் எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்டோர் செய்தியாளர்களை இன்று மே 12-ந் தேதி சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சிவி சண்முகம் கூறியதாவது: எந்த திமுகவை நாங்கள் எதிர்த்தோமோ, அந்த திமுகவினுடைய ஆதரவோடு என்னை முதலமைச்சராக தேர்வு செய்ய ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்.. அதற்கு நாம் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி சொன்னபோது, பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் – அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் – அந்த முன்மொழிவுக்கு யாரும் சம்மதிக்கவில்லை; ஏற்றுக்கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இன்னும் சொன்னால் பேரதிர்ச்சிக்குள்ளானோம். எப்படி இதையெல்லாம், இப்படி ஒரு திட்டத்தை எப்படி சொல்லுகிறார்? எப்படி மனம் உருகிறது? எப்படி எந்த எண்ணத்தில் இதைச் சொல்றார்? அப்படி திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்தால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பதே இல்லாமல் போய்விடும் என்று நாங்கள் கருத்தைச் சொன்னோம். இது தவறு, இது வேண்டாம் என்று நாங்கள் சொன்னோம்.

அப்படி இருக்கின்ற போதே அதை ஏற்க மறுத்தார்கள், ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் நாங்கள் பெரும்பான்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றக் குழுவி கூட்டம் கூட்டப்பட்டது. அந்தக் குழுவினுடைய கூட்டத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானம் என்னவென்றால்:

ADVERTISEMENT

நடந்து முடிந்த தேர்தலிலே தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலே அமைந்த அந்த கூட்டணியில் இருந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் படுதோல்வி அடைந்திருக்கிறது. அதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முந்தைய இந்தக் கூட்டணி, எந்தக் கூட்டணியிலும் இப்போது இல்லை நாங்கள்.

இப்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதிய முடிவை எடுக்க வேண்டும். இந்தக் கட்சி காப்பாற்றப்பட வேண்டும், புத்துயிர் கொடுக்கப்பட வேண்டும். மீண்டும் அம்மாவுடைய ஆட்சி அமைந்தால் அமைய வேண்டும், புதிதாக நாம் கூட்டணி அமைக்க வேண்டும் என்ற நிலைப்பாடு எடுத்தோம். அதன்படி தீர்மானத்தின் படி, மக்கள் தீர்ப்பை ஏற்று இன்றைக்கு வெற்றி பெற்று இருக்கிற, முதலமைச்சராக இருக்கிற தமிழக வெற்றி கழகத்தினுடைய தலைவரை, அந்த ஆட்சியை ஆதரிப்பது என்பதென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்றத்தினுடைய கூட்டத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்டு முடிவெடுக்கப்பட்டது. இவ்வாறு சிவி சண்முகம் தெரிவித்தார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share