எடப்பாடி Vs எஸ்.பி வேலுமணி.. யாருக்கு எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு லிஸ்ட்டில் ‘பரபர’ ட்விஸ்ட்!

Published On:

| By Mathi

AIADMK Edappadi vs SP Velumani

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, எஸ்பி வேலுமணி அணிகளுக்கு இடையேயான மோதலில் அடுத்த புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க வேண்டும் என்று சட்டசபை தற்காலிக சபாநாயகர் மற்றும் சட்டசபை செயலாளரிடம் 17 அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று மே 11-ந் தேதி கடிதம் தந்தனர்.

ADVERTISEMENT

இதற்கு போட்டியாக எஸ்பி வேலுமணியை அதிமுகவின் சட்டசபை குழு தலைவராக ஏற்க வேண்டும் என்று 30 அதிமுக எம்.எல்.ஏ.க்கள், சட்டசபை செயலாளர்- தற்காலிக சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர்.

தற்போதைய தகவல்களின்படி இன்று தற்காலிக சபாநாயகரிடம் இரு கோஷ்டிகளும் கொடுத்த எம்.எல்.ஏக்கள் பட்டியலின் படி, எடப்பாடி பழனிசாமிக்கு அவருடன் சேர்த்து மொத்தம் 23 எம்.எல்.ஏக்கள் ஆதரவும் எஸ்பி வேலுமணிக்கு அவருடன் சேர்த்து மொத்தம் 24 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

ADVERTISEMENT

எடப்பாடி பழனிசாமி அணி 23 எம்.எல்.ஏக்கள்

  1. ஓமலூர் மணி
  2. அக்ரி கிருஷ்ணமூர்த்தி – கலசப்பாக்கம்
  3. பெரும்பாக்கம் ராஜசேகர் – செய்யூர்
  4. ராமச்சந்திரன் – கீழ்பெண்ணாத்தூர்
  5. கே.சி.கருப்பண்ணன் – பவானி
  6. சம்பத் குமார் – அரூர்
  7. மரகதம் குமரவேல் – மதுராந்தகம்
  8. நல்லதம்பி – கெங்கவல்லி
  9. ஜெய்சங்கர் – ஆத்தூர்
  10. ஓ.எஸ். மணியன்- வேதாரண்யம்
  11. ஜெயசுதா – ஆரணி
  12. உஷாராணி – ஏற்காடு
  13. முக்கூர் சுப்பிரமணியன் – செய்யாறு
  14. மோகன் – பண்ருட்டி
  15. தளவாய் சுந்தரம் – கன்னியாகுமரி
  16. பழனிச்சாமி – திருக்கோவிலூர்
  17. வெங்கடாசலம் – மேட்டூர்
  18. வெற்றிவேல் – சங்ககிரி
  19. ராஜேந்திரன் – நெய்வேலி
  20. வேலு – செங்கம்
  21. வேலழகன் – அணைக்கட்டு
  22. கோவிந்தராசன் – பர்கூர்
  23. எடப்பாடி பழனிச்சாமி

எஸ்பி வேலுமணி அணி 24 எம்.எல்.ஏக்கள்

  1. எஸ்.பி. வேலுமணி – தொண்டாமுத்தூர்
  2. சி.வி.சண்முகம் – மயிலம்
  3. சி.விஜயபாஸ்கர் – விராலிமலை
  4. கோ. அரி – திருத்தணி
  5. சுகுமார் – ஆற்காடு
  6. கே.சி.வீரமணி – ஜோலார்பேட்டை
  7. பாலகிருஷ்ண ரெட்டி – ஒசூர்
  8. கே.பி.அன்பழகன் – பாலக்கோடு
  9. மரகதம் வெற்றிவேல் – பாப்பிரெட்டிப்பட்டி
  10. சேகர் – பரமத்தி வேலூர்
  11. சத்தியபாமா – தாராபுரம்
  12. நடராஜ் – காங்கேயம்
  13. ஜெயகுமார் – பெருந்துறை
  14. அரிபாஸ்கர் – அந்தியூர்
  15. ரவி மனோகரன் – பழனி
  16. விஸ்வநாதன் – நத்தம்
  17. எம்.ஆர். விஜயபாஸ்கர் – கரூர்
  18. லீமா ரோஸ் – லால்குடி
  19. தாமரை ராஜேந்திரன் – அரியலூர்
  20. ராகேஷ் – சங்கராபுரம்
  21. அருண்மொழிதேவன் – புவனகிரி
  22. ஆர்.காமராஜ் – நன்னிலம்
  23. திலீபன் ஜெய்சங்கர் – சங்கரன்கோவில்
  24. இசக்கி சுப்பையா – அம்பாசமுத்திரம்

இந்த பட்டியலை முன்வைத்து இன்னும் எத்தனை ட்விஸ்ட்கள் உருவாகுமோ என்கிற பரபரப்பு அதிமுகவில் நிலவுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share