வேலுமணிதான் அதிமுக சட்டமன்ற குழு தலைவர் என 30 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட மனுவை தற்காலிக சபாநாயகரிடம் சி.வி.சண்முகம் மனு அளித்தார்.
அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்த நிலையில், அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான், தங்கள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் என கூறி 17 எம்.எல்.ஏ.க்கள் பேரவை செயலாளர் மற்றும் தற்காலிக சபாநாயகரிடம் இன்று மதியம் மனு அளித்தனர்
இந்தநிலையில் இன்று (மே 11) மாலை சென்னை தலைமைச் செயலகத்தில் தற்காலிக சபாநாயகரை எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சந்தித்தனர்.
அப்போது அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவராக எஸ்.பி.வேலுமணி செயல்பட வேண்டும் என 30 சட்டமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட மனுவை முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
