மெஜாரிட்டியை நிரூபிக்கும் விஜய் அரசு.. சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடக்கும்?

Published On:

| By Mathi

Vijay Govt Trus t Vote

தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு மீது இன்று மே 13-ந் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

சட்டசபையில் தற்போதைய நிலையில் விஜய் அரசுக்கான பலம்:

ADVERTISEMENT

தவெக – 106
காங்கிரஸ் 5
விசிக 2
சிபிஐ 2
சிபிஎம் 2
முஸ்லிம் லீக் 2

மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சட்டசபையில் பெரும்பான்மைக்கு- மெஜாரிட்டிக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்.

ADVERTISEMENT

நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி நடைபெறும்?

  • நம்பிக்கை வாக்கெடுப்பு என்பது சபைக்கு வருகை தந்த எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையில் அடிப்படையில் நடத்தப்படும்.
  • தமிழக சட்டசபையில் மொத்த எம்.எல்.ஏ.க்கள் 234. இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 118.
  • ஆனால் தற்போது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை முதல்வர் விஜய் ராஜினாமா செய்துவிட்டதால் ஒரு இடம் காலியாக உள்ளது. தற்போதைய நிலையில் சட்டசபையில் மொத்த பலம் 233.
  • திருப்பத்தூர் தேர்தல் வழக்கில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துவிட்டது. இதனால் சபையின் பலம் 232. இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்.
  • பெரும்பான்மை என்பது சபையில் உள்ள எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கையில் பாதியுடன் ஒன்றை கூட்டுவது பெரும்பான்மை.
  • சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு குரல் வாக்கெடுப்பு; டிவிஷன் வாக்கெடுப்பு என 2 முறைகளில் நடத்தப்படுவது மரபு
  • சட்டசபை இன்று காலை கூடியதும் முதலமைச்சர் அல்லது மூத்த அமைச்சர் அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை வாசிப்பார்.
  • இத்தீர்மானத்தின் மீது அனைத்து கட்சிகளின் உறுப்பினர்கள் கருத்தை தெரிவிப்பர்.
  • அப்படி கருத்துகளை தெரிவிக்கும் போது அரசு மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து எதிர்த்து வாக்களிப்போம் அல்லது வெளிநடப்பு செய்கிறோம் என எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும்.
  • தற்போதைய நிலையில் சட்டசபையில் அதிமுக, விஜய் அரசுக்கு எதிராக வாக்களிக்கிறது; திமுக வெளிநடப்பு செய்கிறது.
  • அனைத்து கட்சி உறுப்பினர்கள் பேசிய பின்னர் சபையில் வாக்கெடுப்பு நடத்துவார் சபாநாயகர்.
  • குரல் வாக்கெடுப்பில்,
  • ஆதரிப்போர் ஆம் என கூற வேண்டும்
  • எதிர்ப்போஒர் இல்லை என கூற வேண்டும் என சபாநாயகர் கேட்டுக் கொள்வார். எந்த குரல் அதிகமாக இருக்கிறதோ அதனடிப்படையில் வாக்கெடுப்பு வென்றதா? இல்லையா? என்பதை சபாநாயகர் அறிவிப்பார்
  • இந்த குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போது டிவிஷன் வாக்கெடுப்பு பின்பற்றப்படும்.
  • முதலில் சட்டசபைக்குள் அனைத்து எம்.எல்.ஏக்களும் உள்ளே வந்து அமருவதற்கு 3 முறை மணி எழுப்பப்படும்.
  • அனைத்து எம்.எல்.ஏக்களும் சட்டசபைக்குள் அமர்ந்ததும் சபையின் கதவுகள் அனைத்தும் மூடப்படும்.
  • சட்டசபை மொத்தம் 6 டிவிஷன்களாகப் பிரிக்கப்படும்
  • வாக்கெடுப்பின் போது ஆதரவு தருவோரும் எதிர்ப்பு தெரிவிப்போரும் அந்தந்த டிவிஷன்களில் எழுந்து நிற்பர்.
  • இதனடிப்படையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒரு எம்.எல்.ஏ. எதிர்க்கிறாரா? ஆதரிக்கிறாரா? என்பது தெள்ள தெளிவாக பதிவு செய்து கொள்ளப்படும்.
  • இதனடிப்படையில் வாக்குகள் எண்ணப்பட்டு சபாநாயகரிடம் விவரங்களை ஒப்படைப்பர்.
  • இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பு விவரங்களை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்.
  • பொதுவாக சபாநாயகர், நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்பது இல்லை. அதே நேரத்தில் வாக்குகள் ஆதரவு- எதிர்ப்பு சமநிலையில் இருந்தால் அவர் வாக்களிக்கலாம். இதற்கு Casting Vote என்கின்றனர்.
  • இந்த வாக்கெடுப்பில் விஜய் அரசு வென்றால் ஆட்சி தொடரும்; விஜய் அரசு தோல்வி அடைந்தால் ஆளுநர் அர்லேகருக்கு தகவல் தெரிவிக்கப்படும். ஆளுநர் ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை செய்வார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share