தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிரடியாக உயர்த்தி உள்ளது மத்திய அரசு. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை மிக மிக கடுமையாக உயரும்.
மத்திய கிழக்கு போர்ச்சூழல் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு-க்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக கடுமையாக உயர்ந்துள்ளது; இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது.
இதனால் பொதுமக்களுக்கு பிரதமர் மோடி தொடர்ந்து முக்கியமான வேண்டுகோள்களை விடுத்து வருகிறார்.
- பொதுமக்கள் தங்கம் வாங்குவதால் அன்னிய செலாவணி கையிருப்பு வெளிநாடுகளுக்கு போகிறது.. ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம்
- வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்
- சமையல் எண்ணெய் பயன்பாட்டை குறைத்துவிடுங்கள்
- ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுங்கள்
என பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார்.
இந்நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. இதனால் ஏற்கனவே கடுமையாக உயர்ந்து வரும் தங்கம் மற்றும் வெள்ளி பொருட்கள் விலை இனி வாங்க நினைக்கவே கூடாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளது.
