விஜய் அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு- வெளிநடப்பு செய்யும் திமுக

Published On:

| By Mathi

vijay Stalin

முதல்வர் விஜய் அரசு மீது இன்று மே 13-ந் தேதி சட்டசபையில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்ய கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் 108 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக வென்றது தமிழக வெற்றிக் கழகம். ஆனால் மெஜாரிட்டி இல்லாததால் உடனே ஆட்சி அமைக்க முடியவில்லை. தமிழகத்தில் ஆட்சி அமைக்க 118 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை.

ADVERTISEMENT

இதனையடுத்து தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவதாக அறிவித்தனர். இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைத்தார். மே 10-ந் தேதி தமிழகத்தின் புதிய முதல்வராக விஜய் பதவியேற்றார். மே 11-ந் தேதி தமிழக சட்டசபை கூடியது; புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்றனர். இதன் பின்னர் சபாநாயகர் தேர்வு நடைபெற்றது. புதிய சபாநாயாகராக ஜேசிடி பிரபாகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் விஜய் அரசு இன்று சட்டசபையில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை கொண்டு வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் கருத்து தெரிவித்து பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்படும்.

ADVERTISEMENT

விஜய் அரசு மீதான இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்து வாக்களிப்போம் என்று அதிமுக நேற்று அறிவித்தது. அதிமுகவின் கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.

திமுக எம்.எல்.ஏக்கள் இன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய உள்ளனர். திமுகவின் கொறடா எ.வ.வேலு இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ADVERTISEMENT

”விஜய் அரசு, ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள தொடக்கம் முதலே குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறது; ஆட்சியைக் காப்பாற்ற அதிமுகவை இரண்டாக உடைத்து ஆதரவு தரும் அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவி தருவதாகவும் குதிரை பேரம் நடத்துகிறது விஜய் அரசு. அதனால் இந்த அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்கிறோம்” என திமுக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்கிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share