பெரம்பூரில் விசில் கோலமிட்டு விஜய் வாக்கு சேகரிப்பு!

Published On:

| By Kavi

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விசில் சின்னத்தை கோலமிட்டு வாக்கு சேகரித்தார். 

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாக தேர்தலை சந்திக்கிறது.  விஜய் திருச்சி கிழக்கு, பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார். 

ADVERTISEMENT

இந்தசூழலில் நேற்று சென்னையில் நடந்த தவெக தேர்தல் அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய்,  மக்கள் தங்கள் வீட்டு வாசலில் விசில் சின்னத்தை கோலமிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தனது கட்சியின் சின்னத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்க இவ்வாறு கூறினார். 

அதன்படி இன்று பெண்கள் விசில் சின்னத்தை கோலமிட்டு அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். 

ADVERTISEMENT

தொடர்ந்து இன்று மாலை தனது பெரம்பூர் தொகுதிக்கு சென்ற விஜய்  தேர்தல் பணிமனையில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் பணிமனை வாசலில் பெண் நிர்வாகிகளுடன் விசில் சின்னத்தை கோலமிட்டார். 

இதையடுத்து அருகில் உள்ள வீடுகளுக்கு சென்ற விஜய், அங்கிருந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது தங்களின் குறைகளை நான் நிச்சயம் சரி செய்வேன் என்றும், தனக்கு விசில் சின்னத்தில் வாக்கு செலுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

விஜய் பெரம்பூர் வந்திருக்கும் தகவல் பரவியதும் கூட்டம் அதிகமான நிலையில், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் விஜய். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share