எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

Published On:

| By Kavi

எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் முதல்வர் விஜய் இன்று (ஜூலை 8) மாலை ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இன்று தலைமைச் செயலகத்திலிருந்து எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு நடத்தி, தலைமை மகப்பேறு மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

ADVERTISEMENT

தாய் சேய் நல சேவைகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து உள்நோயாளிகள் பிரிவு மற்றும் தாய்மார்கள் சிகிச்சை பெறும் பிரிவுகளுக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மார்களை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

அப்போது சிலர் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் வைக்குமாறு கூறிய நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்று குழந்தைகளுக்கு பெயரும் சூட்டினார்.

தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு தரமான பாதுகாப்பான மற்றும் விரைவான மருத்துவ சேவைகள் தடை இன்றி கிடைப்பதை சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று தன்னுடன் ஆய்வுக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜ் மற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். 

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share