முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும் அவரது தம்பிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
தவெக ஆட்சியை கவிழ்க்க ஊத்தங்கரை ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான இளையராஜாவிடம் 35 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியும், அவரது தம்பியும் விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர்கள் நேரில் ஆஜராகவில்லை. முன் ஜாமீன் கேட்டு இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி இளந்திரையன் முன்பு இன்று பட்டியலிடப்பட்டது.
அதன்படி இன்று மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன் இருவருக்கும் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளார்.
