திமுக, அதிமுகவில் ஆளே இருக்காது – அமைச்சர் நிர்மல்குமார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Nirmal kumar

தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் திமுக, அதிமுகவிற்கு ஆளே இல்லாத நிலை ஏற்படும் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

கோவை சட்டக்கல்லூரியில் இன்று (ஜூலை 8) மூன்றாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்ட தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

ADVERTISEMENT

அப்போது முதல்வரின் கரூர் பயணம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “முதலமைச்சரின் கரூர் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் திமுக மற்றும் அதிமுகவின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. முதலமைச்சர் கரூர் செல்வதைக் கண்டு எதிர்க்கட்சியினர் ஏன் பயப்படுகிறார்கள்? கரூர் பயணத்தை ஏன் தடுக்க முயல்கின்றனர்? தற்போது சிபிஐ விசாரணை குறித்துப் பேசும் இவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கோரியவர்கள் என்பதை மக்கள் மறக்கவில்லை. கரூர் சம்பவத்தை வைத்து என்னென்ன விளையாட்டுகளைக் காட்டினார்கள்? எங்களது தலைவரையும், கட்சியையும் முடக்கப் பார்த்து அனைத்து வேலைகளையும் செய்தார்கள். தற்போது முதல் தகவல் அறிக்கையைக் கூட முழுமையாகப் படிக்காமல், உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளனர்.

தற்போது அரசு மக்கள் பணிகளையும் முழுமையாகச் செய்து வருகிறது. திமுகவும் அதிமுகவும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று நினைத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. இந்த இரு கட்சிகளும் தமிழகத்தில் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் ஒரு சில மாதங்களில், வெறும் 10 முதல் 15 பேரைத் தவிர இந்த இரு கட்சிகளிலும் ஆட்களே இல்லாத நிலை ஏற்படும். அந்த அளவுக்குத் தமிழக மக்கள் அவர்களைப் புறக்கணித்துவருகிறார்கள்.

ADVERTISEMENT

ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் என்பது அனைத்துத் தரப்பு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மக்களின் விருப்பத்தை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளது” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share