முதல்வருக்கான சிறப்பு ‘கான்வாய்’ வாகனங்களில் வந்த விஜய்.. ஆளுநர் அதிருப்தி?

Published On:

| By Mathi

CM Convoy Vehicles vijay

தவெக தலைவர் விஜய்க்கு முதல்வருக்கான சிறப்பு கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டது குறித்து ஆளுநர் அர்லேகர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் அர்லேகரை தவெக தலைவர் விஜய் இன்று மே 6-ந் தேதி நேரில் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது ஆட்சி அமைப்பதற்கான 118 எம்.எல்.ஏக்களின் முழுமையான பட்டியலை ஆளுநர் அர்லேகர், விஜய்யிடம் கேட்டுள்ளார். ஆனால் விஜய் கொடுக்கவில்லை. இதனால் திட்டமிட்டபடி விஜய் நாளை மே 7-ந் தேதி பதவியேற்பாரா? என்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு, முதலமைச்சருகான சிறப்பு கான்வாய் வாகனங்களில் விஜய் சென்றார். இது குறித்து அதிகாரிகளிடம், “முதல்வராக பதவியேற்காத நிலையில் விஜய்க்கு எப்படி இந்த கான்வாய் வாகனங்கள் கொடுக்கப்பட்டன?” என ஆளுநர் அர்லேகர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருக்கிறார்.

இது தொடர்பாக நாம் விசாரித்த போது, ”2021-ல் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்த போது சிறிய அளவிலான பாதுகாப்புடன் மட்டும் வந்தார். முதல்வராக பதவியேற்ற பின்னர்தான் முதலமைச்சருகான சிறப்பு கான்வாய் வாகனங்கள் அவருக்கு கொடுக்கப்பட்டன.. முதல்வராக பதவியேற்ற பின்னரே முதலமைச்சருக்கான வசதிகளைப் பெற முடியும் என்கிற போது பதவியேற்காத நிலையிலேயே விஜய்க்கு இந்த வாகனங்கள் எப்படி கொடுக்கப்பட்டன?” என்பதுதான் ஆளுநர் அர்லேகரின் அதிருப்திக்கு காரணம் என்கின்றனர்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share