அண்ணா கையில் தவெக கொடி… தவெகவினர் அத்துமீறல்!

Published On:

| By Kavi

சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்றிருக்கும் நிலையில், அந்தக் கட்சியினர் உற்சாக நிலையில் உள்ளனர். 

இந்த நிலையில் சென்னை அமைந்தகரை பகுதியில் நடந்த ஒரு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

ADVERTISEMENT

அமைந்தகரையில் அண்ணா வளைவு அருகே அமைந்துள்ள முன்னாள் முதல்வர் அண்ணாவின் திருவுருவ சிலையில் அவரது கையில் தமிழக வெற்றி கழகத்தின் கொடி வைக்கப்பட்டுள்ளது. 

இதை அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். 

ADVERTISEMENT

வழக்கமாக சிலைகளின் புனிதம் காக்கப்பட வேண்டிய சூழலில், திமுக நிறுவனரான அண்ணாவின் கையில் ஒரு புதிய கட்சியின் கொடி வைக்கப்பட்டிருப்பதற்கு சமூக வலைதள வாசிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

இது கொண்டாட்டம் அல்ல வரம்பு மீறிய செயல் எனவும் கமெண்ட்களில் பதிவிட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT

புதிய ஆட்சி அமைய உள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத் தொண்டர்கள் பொறுப்புடன் இருக்க வேண்டும், அந்த கட்சி தலைமை இது போன்ற செயல்களில் தொண்டர்கள் ஈடுபடுவதை கண்டிக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share