தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தவெக ஆட்சியமைக்கவுள்ளது. பெரும்பான்மை கிடைக்காததால் இதர கட்சிகளுடன் தவெக பேசி வருகிறது. இன்று காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. அதன்படி தவெகவின் பலம் 113ஆக அதிகரித்துள்ளது. இன்னும் 6 எம்.எல்.ஏக்கள் ஆட்சியமைக்க தேவை
மேலும் சில கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தரும் என்று கிரிஷ் சோடங்கர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆட்சியமைக்க உரிமை கோரி தமிழ்நாடு ஆளுநர் அர்லேகரை சந்தித்தார் விஜய்.
அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 5 பேர் ஆதரவு தெரிவித்த கடிதத்தையும் வழங்கியுள்ளார்.
விஜய்யுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, அருண் ராஜ், சி.டி.ஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோரும் சென்றனர்.
இதனிடையே நாளை காலை 11.30 மணிக்கு முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்கவிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் விழாவில் முதலமைச்சராக பதவியேற்கிறார்.
