ஸ்டாலினை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த்

Published On:

| By Pandeeswari Gurusamy

MK Stalin

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவாகியுள்ளது. தமிழகத்தில் 59 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி இன்று தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தோல்வியைச் சந்தித்த நிலையில், நேற்று கொளத்தூர் தொகுதியில் வாக்களித்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றிருந்தார்.

ADVERTISEMENT

திமுக தலைவர் ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று நடிகர் ரஜினிகாந்த் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது, “வெற்றி பெறும் நேரத்தில் மட்டுமல்ல, இக்கட்டான நேரத்திலும் உடன் இருப்பேன்” என ரஜினிகாந்த் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share