வைஃபை ஆன் செய்ததும், ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக பாடு பண் பாடு”ன்னு ஹம்மிங் செய்தபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
பாட்டு என்னய்யா வித்தியாசமா இருக்கு?
அவ்வளவு வித்தியாசமாவா இருக்கு.. இங்கே ஒவ்வொரு நிமிஷமும் பரபரப்பா ஓடுகிட்டு இருக்குது..
ஆளுநர் அர்லேகரை சந்திச்சு ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கிறார் விஜய்..
தவெக ஆட்சி அமைக்க முதல் கட்சியாக காங்கிரஸ் ஆதரவு தந்திருக்குது.. திமுக கூட்டணியையே விட்டு வெளியேறி தவெகவுடன் கை கோர்த்திருச்சு காங்கிரஸ்..
அப்ப சிபிஎம், சிபிஐ, இடதுசாரிகள் என்ன முடிவாம்?
இதை பத்தி விசாரிச்சப்ப, “எலக்ஷன் முடிஞ்ச நைட்டே சிஎபிம் எம்பி சு.வெங்கடேசனுக்கு ஆதரவு கேட்டு மெசேஜ் அனுப்பிட்டாரு விஜய்..
இதுக்கு அப்புறமா நேத்து சிபிஎம் ஆபிசில் பெ.சண்முகம், சிபிஐ வீரபாண்டியன், விசிக திருமாவளவன் – ரவிக்குமார் எல்லாருமே லஞ்ச் சாப்பிட்டிபடியே டிஸ்கஷன் நடத்தினாங்க.. அதுக்கு அப்புறம்தான் ஒன்னாகவே போய் ஸ்டாலினையும் சந்திச்சு பேசுனாங்க..
அதுக்கு அப்புறமா, மீடியாவுல பேசும் போது நேத்துவரைக்கும் அழைப்பு வரட்டும் பார்க்கலாம்னு சொன்னாங்க.. இன்னைக்கு விசிக, ‘எங்களுக்கு லெட்டர் வந்துருக்கு.. நாளைக்கு முடிவு எடுக்கிறோம்’னு சொல்லி இருக்கு
எங்கள்கிட்ட ஆதரவே கேட்கலைன்னு சிபிஎம் சண்முகம் சொல்லிகிட்டு இருந்தாலும் அந்த கட்சியும் மாநில குழு கூட்டத்தை நாளைக்கு கூட்டியிருக்கு.. சிபிஐயும் மாநில குழுவை கூட்டியிருக்கு
லெப்ட் பார்ட்டீஸ், விசிக என்ன முடிவு எடுக்கப் போறாங்களாம்?
இதை பத்தி விசாரிச்சப்ப, “சிபிஐ, சிபிஎம் ரெண்டு கட்சிகளுமே உடனடியாக ஒரு கூட்டணியில போய் சேர்ற வழக்கமே இல்லை.. குறைந்தபட்ச செயல் திட்டம் எல்லாம் உருவாக்கி அதுக்கு ஒப்புதல் வாங்கி அதுக்கு பிறகுதான் ஆதரவு தெரிவிப்பாங்க..
அப்படியே ஆதரவு தெரிவிச்சாலும் வெளியே இருந்துதான் ஆதரவுன்னு சொல்லுவாங்களே தவிர அமைச்சரவையில இடம் பெறுவாங்களான்னு கேள்விக்குறிதான்னு சொல்றாங்க..
திருமாவைப் பொறுத்தவரைக்கும் நேத்து அண்ணா அறிவாலயத்துல சந்திச்சப்பவே ஸ்டாலின் தனியா கூப்பிட்டு பேசினார்.. அப்ப, ”தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டாம்”னு ஸ்டாலின் கேட்டுகிட்டார்..
அதேநேரத்துல தவெக சைடுல இருந்து ஆதவ் அர்ஜூனா, அருண்ராஜ்னு திருமாகிட்ட பேசிகிட்டுதான் இருக்காங்க…
திமுகவும் இடைவிடாம திருமாகிட்ட பேசுகிறது. அதனால விசிகவுல தொடர்ந்து டிஸ்கஷன் நடந்துகிட்டே இருக்கு..
விசிக கட்சிக்குள்ள பார்த்தீங்கன்னா, ”தவெகவை ஆதரிக்கலாம்; அமைச்சர் பதவி நமக்கு கிடைச்சா கட்சிக்கு நல்லதுதானே”.. அப்படிங்கிற குரல் வலுவா இருக்கிறது..
இப்ப நிலைமை வரைக்கும் இடதுசாரிகளும், விசிகவும் என்ன முடிவு எடுப்பாங்கன்னுதான் எதிர்பார்ப்பா இருக்குது”ன்னு சொல்றாங்க
ஓ.. போய் சேருகிற எல்லா கட்சிக்கும் அமைச்சரவையில இடம் உண்டா?
இதைப் பத்தி விஜய்க்கு நெருக்கமானவங்ககிட்ட விசாரிச்சப்ப, “5 எம்.எல்.ஏக்களை வெச்சிருக்கிற காங்கிரஸ் கட்சி 2 அமைச்சர் பதவிகளை கேட்கிறது.. 2 எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் விசிகவுக்கு 1 அமைச்சர் பதவி தரலாம்னு விஜய் சொல்லி இருக்கிறார்” என்கின்றனர்..
அதிமுகவில பெரிய கலகமே வெடிச்சிருக்கும் போல?
ஆமாய்யா.. அதிமுக இந்த எலக்ஷன்ல 47 இடத்துலதான் ஜெயிச்சது.. பெரும்பாலான தொகுதிகளில்ல டெபாசிட்டையே இழந்திடுச்சு..
பொதுவாக எடப்பாடியை சந்திக்கும் போது சீனியர்ஸ் சிலர் பொக்கே கொண்டு போவாங்க.. ஆனா நேத்து எடப்பாடியை சந்திக்க போனவங்க வெறும் கையோடுதான் போனாங்களாம்..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமின்னு எல்லா சீனியர்ஸும் கோபத்துடன்தான் எடப்பாடியை சந்திச்சாங்க.. அப்ப, “உதயநிதிகிட்ட திமுக ஆட்சி அமைக்க ஆதரவு தர்றது பத்தி ஏன் பேச்சுவார்த்தை நடத்துறீங்க?”ன்னு எடப்பாடியிடம் கடுப்படித்துவிட்டது சீனியர்ஸ் டீம்.
அதோட அதிமுக எம்.எல்.ஏ.க்கல் பலர் சிவி சண்முகம் வீட்டுல ஒன்னு கூடி இருக்காங்க.. அங்கே எஸ்பி வேலுமணி, கேபி முனுசாமி, புதுக்கோட்டை விஜயபாஸ்கர்னு எல்லாருமே வந்து ஆலோசனை நடத்திகிட்டேஇருக்காங்க.
சீனியர்களைப் பொறுத்தவரைக்கும், தவெக ஆட்சி அமைக்க ஆதரிக்கலாம்னு நினைக்கிறாங்களாம்.. துணை முதல்வர் பதவி, அமைச்சர்கள் பதவி கேட்கலாம்னு இருக்காங்களாம்..
அதோட, சிவி சண்முகம்கிட்ட 15 வன்னியர் எம்.எல்.ஏக்கள் இருக்கிறதால அவரோட கைதான் ஓங்கி இருக்கு.. இப்போதைக்கு சட்டசபை குழு தலைவராக எடப்பாடிக்கு பதிலாக சிவி சண்முகத்தை தேர்ந்தெடுக்கலாம்னு ப்ளான் பண்றாங்களாம்.. இன்னும் சில மாசத்துல அதிமுக சிறப்பு பொதுக்குழுவை கூட்டி, அதிமுகவின் புதிய பொதுச்செயலாளராக சிவி சண்முகத்தை தேர்வு செய்யவும் எஸ்பி வேலுமணிக்கு அதுக்கு இணையான பதவி கொடுக்கவும் ஸ்கெட்ச் போட்டிருக்காங்களாம்..
என்னதான் இருந்தாலும் காங்கிரஸ், விசிக, லெப்ட் பார்ட்டீஸ்கிட்ட ஆதரவு கேட்ட மாதிரி அதிமுக பக்கம் விஜய் திரும்பிப் பார்க்கவே இல்லை.. இதுல விசிக, லெப்ட் பார்ட்டீஸ் இன்னமும் முடிவும் சொல்லலை..
ஆனாலும் அதிமுகவின் சிவி சண்முகம் கோஷ்டி முந்திக் கொண்டு தவெகவை ஆதரிக்கனும்னு சொல்லுது.. விஜய் சிஎம்மா பதவியேற்ற பின்னாலும் கூட இந்த சஸ்பென்ஸ் இப்படியே இருக்கும் போல… என்றபடியே டைப் செய்துவிட்டு சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
