தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், ஆ.ராசாவின் எக்ஸ் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டமன்றத் தேர்தலில் தவெக வெற்றி பெற்று, பெரும்பான்மைக்காக மற்ற கட்சிகளுடன் பேசி வருகிறது. இதில் காங்கிரஸ் தவெக கூட்டணியில் இன்று இணைந்தது.
திமுகவும், முன்னாள் முதல்வர் ஸ்டாலினும் தோல்வி அடைந்திருக்கும் இந்த சூழலில் திமுக கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்திருக்கிறது.
இந்தசூழலில் திமுக துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில், “ஈரம் காயாத
‘கை’யால்
நெரிபட்டு மரணித்தது
‘அரசியல் நெறி’ மட்டுமல்ல;
அவசியமான
‘அடிப்படை நாகரீக’மும் தான்!
வாழ்க ஜனநாயகம்!!” என்று பதிவிட்டுள்ளார்.
அரசியலில் கூட்டணிக் கொள்கை அல்லது தர்மம் என்பது முக்கியம். ஒரு கட்சிக்கு இக்கட்டான நேரத்தில் உதவிய மற்றொரு கட்சிக்குத் துரோகம் செய்வது அல்லது மாற்று அணியை ஆதரிப்பது அரசியல் நெறி மரணிப்பதற்குச் சமம் என்ற வகையில் இவ்வாறு பதிவிட்டுள்ளார் ஆ.ராசா
