அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கான கட்சி பதவிகளை அக்கட்சித் தலைவரும் முதல்வருமான விஜய் அறிவித்துள்ளார்.
முதல்வர் விஜய் இன்று ஆகஸ்ட் 8-ந் தேதி வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே மக்கள் தன்னெழுச்சியாகவும் பெருந்திரளாகவும் தங்களின் ஆதரவை அளித்து வருவதை இந்த நாடே அறியும். தமிழக வெற்றிக் கழகம் மக்களுக்காக எப்பொழுதுமே முதலும் முன்னோடியுமாக இயங்கி வருகிறது. இதனால் அதனுடைய கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவது அவசியமாகிறது.

அந்த வகையில் மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் மற்றும் துணைப் பொதுச் செயலாளர்களாக பின்வருபவர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
மாவட்ட அமைப்புச் செயலாளர்கள்
டாக்டர் சி. விஜய பாஸ்கர் MBBS., முன்னாள் அமைச்சர், புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளர்
எம்.ஆர். விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர், கரூர் மாவட்ட அமைப்புச் செயலாளர்
இசக்கி சுப்பையா முன்னாள் அமைச்சர், தென்காசி மாவட்ட அமைப்புச் செயலாளர்
துணைப் பொதுச் செயலாளர்கள்:
எம்.ஆர். விஜய பாஸ்கர், முன்னாள் அமைச்சர், கரூர்
கே.மரகதம் குமரவேல் முன்னாள் எம்.எல்.ஏ., மதுராந்தகம்
எஸ். ராஜகோபால், நாங்குநேரி
ஜாகிர் உசேன், அம்பாசமுத்திரம்
வி. குமார் ஐடிஐ, பல்லாவரம்
எஸ். யுவராஜ், சிங்காநல்லூர்
சி.வி. தினகரன், திருப்போரூர்
கே. மணிகண்டன். டிசிஎஸ், ஆவடி
ஆர்.எஸ். மணிகண்டன், வீரபாண்டி
கே. அருள்ராஜ், திருவெறும்பூர்
எஸ்டிஆர் சாமுவேல் ராஜ் டிசிடி, தூத்துக்குடி
