செக் மோசடி : சரத்குமாருக்கு சம்மன்!

Published On:

| By Kavi

செக் மோசடி வழக்கில் நடிகரும் பாஜக பிரமுகருமான சரத்குமார் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்ப சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணாவிடம் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 2 கோடி ரூபாய் சரத்குமார் கடன் பெற்றுள்ளார். 

ADVERTISEMENT

இந்த கடனை திருப்பி அடைப்பதற்காக சரத்குமார் கொடுத்த செக் பணம் இல்லாததால் திரும்பி வந்துள்ளது. 

இதனால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரத்குமார் மீது ஸ்ரீ கிருஷ்ணா செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 8) சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது செப்டம்பர் 10ஆம் தேதி சரத்குமார் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு விசாரணையையும் அன்றைய தினத்துக்கு ஒத்தி வைத்துள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share