போட்டியை தவிர்த்த நயன்தாரா? தள்ளிப்போன ‘ஹாய்’ பட ரிலீஸ்!

Published On:

| By Kavi

நயன்தாரா கவின் நடிக்கும் ’ஹாய்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ரிலீஸாகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா வளர்ந்து வரும் இளம் நடிகரான கவினுடன் இணைந்து நடித்த படம் ’ஹாய்’. இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவி இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கியிருக்கிறார்.

ADVERTISEMENT

‘7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ மற்றும் இயக்குநரும் நயன்தாரா கணவருமான விக்னேஷ் சிவனின் ‘ரௌடி பிக்சர்ஸ்’ இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படத்தில் மறைந்த கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி.டி.வி கணேஷ், சத்யன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணக்குழியா பாடலை ஜிவி பிரகாஷ் பாடியுள்ளார். ரசகுல்லா பாடலை அனிருத் பாடியுள்ளார்.

ADVERTISEMENT

இந்தநிலையில் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி ’ஹாய்’ திரைப்படம் திரைக்கும் வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, கவின் இணைந்து இதற்கான வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

அதில் நயன்தாரா 14 மற்றும் 28 ஆகிய தேதிகளைக் குறிப்பிட, முடிவில் திரையில் தோன்றும் தேதியைப் பார்த்து திரையரங்குகளில் படத்தைக் காணுமாறு ரசிகர்களை கேட்டுக்கொண்டனர். வழக்கமாக பட ப்ரோமோஷன் பணிகளில் நயன்தாரா ஈடுபடுவதில்லை. ஆனால் இந்த படத்தையொட்டி வீடியோ வெளியிட்டிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா குறிப்பிட்ட மற்றொரு தேதியான ஆகஸ்ட் 14ஆம் தேதி சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் வெளியாகிறது. அதுபோன்று விஷால் நடிப்பில் உருவாகியுள்ள மகுடம் திரைப்படமும் ஆகஸ்ட் 14 வெளியாகிறது.

இதனால் ஆகஸ்ட் 28ஆம் தேதி,’ஹாய்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share