நடிகர் ரியோ ராஜின் ராம் இன் லீலா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி வந்த ரியோ ராஜ், நெஞ்சம் உண்டு ‘நேர்மை உண்டு ஓடு ராஜா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.
அதன் பின் ஜோ, ஸ்வீட் ஹார்ட், ஆண்பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
இதில் ஜோ, ஆண்பாவம் பொல்லாதது உள்ளிட்ட படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் ரியோ ராஜ், ‘ராம் இன் லீலா’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ராமச்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ளார். வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு அங்கீத் மேனன் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது டப்பிங், ரீ ரெக்கார்டிங் பணிகள் நடந்து வருகின்றன.
இந்த நிலையில் ராம் இன் லீலா திரைப்படம் உலகம் முழுவதும் ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று பட குழு அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் ‘செப்பு சேலை’ பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
