மதுரையில் திரிஷா நற்பணி மன்றம் தொடங்கப்பட்டிருப்பதாக கூறி பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் திரிஷா. நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தற்போது முதல்வராகி இருக்கும் நிலையில், அவரது தமிழக வெற்றிக் கழகத்தில் திரிஷா இணையலாம் என்று சொல்லப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் மதுரையில் ’திரிஷா நற்பணி மன்றம்’ என்று பல இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், ’எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆரம்பிக்கும் முதல் மண் எங்கள் மதுரை.
என்றும் மதுரை மீனாட்சி தாய் ஆசீர்வாதத்தால்… தமிழக சங்க வரலாற்றில் முதல் முறையாக எங்கள் அன்பு அக்கா திரிஷாவிற்கு தமிழக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முதல் சங்கம்’ போன்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.
மேலும் தமிழக வீர மங்கை வேலு நாச்சியார் வழியில் என்ற முழக்கத்துடன் வேலு நாச்சியார் படமும் அச்சிடப்பட்டு திரிஷாவை அரசியலுக்கு அழைக்கும் நோக்கில் போஸ்டர்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக ’அரசால் அங்கீகரிக்கப்பட்ட சங்கம்’ என்றும் ’வேலு நாச்சியார் வழி’ என்றும் போஸ்டரில் அச்சிடப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
