”நான் சிம்புவுக்கு அம்மாவெல்லாம் இல்லை” என்று நடிகை ஆண்ட்ரியா கூறியுள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் படம் அரசன். கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.
வடசென்னை படம் பின்னணியில் கேங்ஸ்டர் கதைகளத்தில் இந்த படம் உருவாகி வருவதாக பட குழுவினர் கூறுகின்றனர்.
இந்த படத்தில் சிம்புவுடன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவர்களோடு ஆண்ட்ரியா, யோகி பாபு, சமுத்திரகனி, விக்ராந்த் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் தொடக்கத்தில் சிறு வயது சிம்புவின் அம்மாவாக ஆண்ட்ரியா நடிக்கிறார் என்று சமூக வலைதளங்களில் செய்திகள் பரவின.
இந்த தகவல்களுக்கு ஆண்ட்ரியா இன்று (ஆகஸ்ட் 3) பதில் அளித்துள்ளார்.
கோவையில் நகைக் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர், ”நான் சிம்புவோட அம்மா கிடையாது. நான் சந்திரா தான் (கதாபாத்திரத்தின் பெயர்). தவறு தவறாக நியூஸ் போடுகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
வடசென்னை படத்தில் நடிகை ஆண்ட்ரியா ’சந்திரா’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
