அதிரப்பள்ளி காட்டில் ராஷ்மிகாவுக்கு நடந்த சோகம்… என்ன ஆனது?

Published On:

| By Kavi

படபிடிப்பு தளத்தில் கீழே விழுந்ததால் நடிகை ராஷ்மிகா மந்தானாவுக்கு இடுப்பு பகுதியில் அடிபட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தானா. தமிழில் முதல்வர் விஜய்யுடன் வாரிசு, குபேரா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களால் நேஷனல் கிரஸ் என அழைக்கப்படும் ராஷ்மிகாவுக்கும் நடிகர் விஜய தேவரகொண்டாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

ADVERTISEMENT

திருமணத்துக்கு பின்னரும் ராஷ்மிகா சினிமாவில் பிஸியாக இருந்து வருகிறார்.

தற்போது, ரவீந்திர புல்லே இயக்கும் ‘மைசா’ என்ற படத்தில் போர் வீராங்கனை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார், அன்பார்முலா பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது.

ADVERTISEMENT

இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் கேரள மாநிலம் அதிரப்பள்ளி காட்டுப்பகுதியில் நடைபெற்று வந்தது. இதில் நடித்துக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக ராஷ்மிகா கீழே விழுந்துள்ளார். படத்தின் முக்கிய பாடல் ஒன்றுக்கு நடனமாடிக்கொண்டிருந்தபோது கீழே விழுந்ததில் இடுப்பு, தொடை பகுதியில் அடிபட்டுள்ளது.

உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இடுப்பு பகுதியில் இருக்கும் தசைநார் கிழிந்துவிட்டதாகவும் குறைந்தது 6 வாரங்களுக்கு முழுமையாக ஓய்வில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இதனால் ராஷ்மிகா ஓய்வில் இருப்பதால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share