முதலில் அப்பாதான்… மனம் திறந்த ஜேசன் சஞ்சய்

Published On:

| By Kavi

முதல்வர் விஜய் குறித்து அவரது மகனும் இயக்குனருமான ஜேசன் சஞ்சய் பேட்டி அளித்தது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் விஜய் மகன் சஞ்சய், லைகா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் சஞ்சய். 

ADVERTISEMENT

சந்திப் கிஷன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. 

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இப்படம் உருவாகியுள்ளது. ஜூலை 31ஆம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது. 

ADVERTISEMENT

தற்போது படக்குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் இயக்குனர் சஞ்சய், பிகைன் வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். 

தொகுப்பாலினி திவ்யதர்ஷினி உங்கள் பெயர் ஜேசன் சஞ்சய்… சிக்மா திரைப்படம் வெளியாகி யார் இந்த இயக்குனர்… அவரை கூப்பிடுங்கள் படம் எடுக்கலாம் என்று ஹாலிவுட் நடிகர் ஜேசன் ஸ்டேதம் அழைத்தால், இந்தியாவிலிருந்து எந்த நடிகரை அழைத்துச் செல்வீர்கள் என்று கேள்வி எழுப்பியதற்கு, 

ADVERTISEMENT

”எனக்கு முதலில் நினைவில் வருவதே… இவர்தான்… அப்பாதான்…. நல்ல காம்பினேஷன் ஆக இருக்கும்” என்று பதில் அளித்தார் சஞ்சய். 

தொடர்ந்து லைகா நிறுவனத்துடன் முதல் முறையாக பணியாற்றியது தொடர்பாக பேசிய சஞ்சய், ”லைகா நிறுவனத்திற்கு முதல் படமே கத்தி தான். எனக்கு முதல் படம் லைகா நிறுவனம் தான். அதனால் இது எனக்கு உணர்வு பூர்வமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். 

தமிழ்நாடு முதல்வரும் தனது தந்தையுமான விஜய் குறித்து சஞ்சய் பேட்டி அளித்திருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share