இன்று இணையதளங்களில் வைரலான மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை பார்த்து ரிலாக்ஸ் ஆகலாம் வாங்க.

படிக்காதவன்
நாட்ல இப்ப பெருசா பேசப்படுறது தவெக ஆட்சியும்
தண்ணீர் பிரச்சினையும்தான்
மக்களை வாட்டி எடுக்குது…

Pops
டாக்டர் தான் ஆகனுமா? ஏன் plumber, carpenter ஆக கூடாதா – நிர்மல் குமார்.
~ அமைச்சர் தான் ஆகனுமா? ஏன் இந்த கவுன்சிலர்’லாம் ஆக கூடாதா?.

கோவிந்தராஜ்
நாலு நாளா தியேட்டர்ல அழுதது போதாதா இன்னும் ஏன் சார் அழறீங்க…?
இப்ப அழறது நானு…
யார்ரா அது…?
தியேட்டர் ஓனர்ங்க…!

தேனு வெங்கட்
புரிதல் தான் தேவையே தவிர
புரிய வைக்க தேவை இல்லை..

படிக்காதவன்
இங்கு ஒவ்வொருத்தருமே இந்த நிமிடம் வரைக்கும்
காலத்தை வென்றவங்கதான்…
ச ப் பா ணி
வாழ்க்கை இனிப்பானது
சுகர் டெஸ்ட் எடுக்கும் போது

iQKUBAL
நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்டன்னு சொல்றான் பாரு, அவன கூட நம்பு..
ஆனா, உன் நல்ல மனசுக்கு நல்லதுதான் நடக்கும்னு சொல்றான் பாரு, அவன மட்டும் நம்பாத..
Sasikumar J
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாம இருந்தா தான் மகிழ்ச்சியா இருக்கலாம்…“ன்னு சொல்லுறவங்க,
சம்பளம் ஒரு நாள் லேட்டா வந்தாலே…
“வாழ்க்கையே என்னை ஏமாத்திடுச்சு!“ன்னு ஃபீல் பண்ணி வாட்ஸ்அப் ல ஸ்டேட்டஸ் வைப்பாங்க!

லாக் ஆஃப்
.
