கட்டா குஸ்தி 2 முதல் லவ் ஓ லவ் வரை… இந்த வார ஓடிடி ரிலீஸ்!

Published On:

| By Kavi

திரையரங்கில் ஒவ்வொரு வாரமும் புதிய படங்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அவ்வாறு வெளியாகும் படங்கள் குறிப்பிட்ட நாட்களில் ஓடிடி தளங்களிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது.

ADVERTISEMENT

அந்த வகையில் இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்காக காதல், காமெடி, ஆக்சன் என பல்வேறு ஜானரில் படங்கள் வெளியாகின்றன.

சின்ன சின்ன ஆசை

ADVERTISEMENT


இந்திரன்ஸ் மற்றும் மதுபாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள மலையாள திரைப்படமான ”சின்ன சின்ன ஆசை” ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஆகா ஓடிடியில் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஸ்ட்ரீமிங் ஆகிறது.

ஹார்ட் பீட்

ADVERTISEMENT


ரசிகர்களின் வரவேற்புக்கு மத்தியில் ஹார்ட் பீட் மூன்றாம் பாகம் இன்று வெளியாகியுள்ளது. மருத்துவ பின்னணியை கொண்ட இத்தொடரில் தீபா பாலு, அனுமோல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

கட்டா குஸ்தி 2


இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி 2 திரைப்படம் நாளை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட மொழிகளில் இப்படத்தை கண்டு மகிழலாம்.

லவ் ஓ லவ்

தனுஷ் இயக்கிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான பவிஷ் நடிப்பில் உருவான இரண்டாவது படமான லவ் ஓ லவ் திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படத்தில் கே.எஸ். ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

செகண்ட் மேரேஜ்
தெலுங்கில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படமான செகண்ட் மேரேஜ் இன்று etvwin தளத்தில் வெளியாகி உள்ளது.

பாலன் தி பாய்


மலையாளத்தில் வெளியான பாலன் தி பாய் திரைப்படம் ஜூலை 31ஆம் தேதி ஜீ5 ஓடிடி-யில் வெளியாகிறது.

தீவானா
ஸ்ரீகாந்த் சங்கிசெட்டி இயக்கத்தில், தெலுங்கில் வெளியான காமெடி ரொமான்டிக் திரைப்படமான தீவானா ஜூலை 31ஆம் தேதி ஆகா ஓடிடியில் வெளியாகிறது.

அப்ஜக்ஷன் மை லார்டு
தெலுங்கில் உருவாகியுள்ள திரில்லர் டிராமா வெப் தொடரான அப்ஜக்ஷன் மை லார்டு ஜூலை 31ஆம் தேதி ஜீ 5 ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share