தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்த மோகன் சர்மா தற்போது கும்மிடிப்பூண்டியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வருகிறார்.
இது தொடர்பாக பேசிய அவர், ‘நம்ம கிராமம்’ படத்துக்காக கடன் பட்டதாகவும், அதைத்தொடர்ந்து கையில் ஒரு பைசா கூட இல்லாத நிலைக்கு வந்து விட்டதாகவும் கூறியிருந்தார்.
அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் மோகன் சர்மா தொடர்பாக தனது யூடியூப் சேனலில் பேசியுள்ள நடிகை குட்டி பத்மினி, மோகன் ஷர்மா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்.
“மோகன் சர்மா ஃபிலிம் சேம்பர் தனக்கு எந்த உதவியும் பண்ணவில்லை என்று கூறியிருக்கிறார். முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் பேசி இருக்கிறார். ஃபிலிம் சேம்பரில் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். ஃபிலிம் சேம்பர் மூலம் கடந்த ஆண்டு அவர் 2 லட்சம் ரூபாய் வாங்கி இருக்கிறார். அதற்கான ரசீது உள்ளது.
மற்ற சங்கங்களை விட ஃபிலிம் சேம்பர் சிறப்பாக நடைபெறுகிறது.
உயிரோடு இருக்கும் போது விட்டுவிட்டு இறந்த பிறகு எதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.
ஒருவர் இறந்து விட்டால் அவரது குடும்பத்துக்கு நிறைய செலவு இருக்கும். இறுதிச் சடங்கிற்கு பணம் தேவைப்படும். இதையெல்லாம் நல்லபடியாக நடப்பதற்காக கொடுக்கிறார்கள்.
அவர் அளந்து விடுவதற்கு ஒரு அளவே இல்லாமல், பொய் பேசி இருக்கிறார்.
அவர் ஒரு நல்ல நடிகர். அதை கண்டிப்பாக நான் ஏற்றுக்கொள்கிறேன். இல்லையென்றால் இவ்வளவு தத்ரூபமாக அவரால் பேச முடியாது.
மக்கள் எல்லாம் உருகிப் போய், அவர் எவ்வளவு கஷ்டப்படுகிறார். சிஎம் அவருக்கு ஹெல்ப் பண்ண வேண்டும் என்றெல்லாம் பேச ஆரம்பித்து விட்டார்கள்.
போயஸ் கார்டனில் வசித்து வந்தேன். அந்த வீடு போயிடுச்சு என்று சொல்கிறாரே? அந்த வீடு எங்கே போனது… யார் விற்றது… போயஸ் கார்டன் வீடு யாருடையது. இதற்கு அவர் பதில் சொல்ல வேண்டும்.
லட்சுமி அக்கா போயஸ் கார்டன் வீடு வாங்குவதற்காக அவரை நம்பி 5.5 லட்சம் ரூபாய் கையில் கொடுத்தார் . ஆனால் மோகன் சர்மா, லட்சுமி அக்காவிடம், ‘இல்லமா அந்த பிளாட் போய்விட்டது’ என்று கூறிவிட்டு தனது பெயரில் ரிஜிஸ்டர் செய்து கொண்டார்.
லட்சுமி அக்காவை பிரிந்த பின்னர் வேறொரு பெண்ணை திருமணம் செய்தார். அந்தப் பெண்ணுக்கு பிறந்த பையன் ஜெர்மனியில் நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்.
அவரது தாயையும் பிரிந்து தான் பரதநாட்டிய கலைஞர் சாந்தியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். அவருக்கு சொந்தமான வீடு எல்லாம் விற்று செலவு செய்து விட்டு ஏமாற்றி விட்டார். இதனால் சாந்தியும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து விட்டார்.
ஊரெல்லாம் கடன் வாங்கி வைத்திருக்கிறார். எவ்வளவு வாங்கி இருக்கிறார், எங்கு வைத்திருக்கிறார் என்று யாருக்குமே தெரியாது.
போயஸ் கார்டன் பிளாட்டை கூட விற்பதாக எனக்கு அந்த வீட்டின் வீடியோவை அனுப்பினார். 6 கோடி ரூபாய்க்கு விற்பதாக கூறினார்.
கடனில் இருந்த அந்த வீட்டை ஒரு டாக்டர் வாங்கினார். வங்கியில் இரண்டரை கோடி கடன் இருந்தது அதை கிளியர் செய்துவிட்டு மீதி பணத்தை மோகன் சர்மாவுக்கு செட்டில் செய்தார்.
ஆனால் வீட்டை காலி செய்யவில்லை. ஒரு மாதம் தங்கி கொள்கிறேன் என்று கூறிவிட்டு அந்த டாக்டருக்கு தெரியாமலேயே இன்னொரு மீடியேட்டருக்கு வீட்டை விற்று விட்டார்.
இதனால் இரண்டு ஆண்டுகளாக அந்த டாக்டர் போயஸ் கார்டன் வீட்டை மீட்க படாத பாடுபட்டார். மோகன் சர்மா என்னை அடித்து விட்டார்கள் என்கிறார். ஆனால் யாரிடம் பணம் வாங்கிக் கொண்டு வீட்டை கொடுத்தாரோ அவர்கள் தான் மோகன் சர்மாவை தாக்கினார்கள்.
இவர் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியதால்தானே அடிக்க வருகிறார்கள்.
இவரிடம் பணம் இல்லை என்று சொல்வதை நம்ப முடியவில்லை. ஆறு கோடி ரூபாய்க்கு வீட்டை விற்றுவிட்டு எதற்கு கஷ்டப்படுகிறார்.
முதல்வர் விஜய் உதவி செய்தாலும் கொஞ்சம் நாள் கழித்து அவரையும் ஏதாவது குறை சொல்வார்.
தற்போது முதியோர் இல்லத்தில் உட்கார்ந்து இருக்கும் இவர் காலில் போட்டுள்ள செருப்பின் விலை 6000 ரூபாய் ஆகும். 6000 ரூபாய்க்கு செருப்பு போடுபவர் எதற்கு முதியோர் இல்லத்திற்கு வர வேண்டும்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்
