குடியரசுத் துணை தலைவர் தேர்தலுக்கு போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி தமிழ்நாடு வருகை தரவுள்ளார்.
ஜெகதீப் தங்கர் ராஜினாமாவைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 9ஆம் தேதி குடியரசுத் துணை தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கு என்.டி.ஏ கூட்டணி சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த மூத்த பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அவருக்கு போட்டியாக இந்தியா கூட்டணி சார்பில் தெலங்கானாவைச் சேர்ந்த உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சுதா்சன் ரெட்டி வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
நேற்று குடியரசுத் துணை தலைவர் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.
தொடர்ந்து பல்வேறு மாநிலங்களுக்கும் சென்று எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலை, சுதர்சன் ரெட்டி சந்தித்து பேசினார்.
இந்நிலையில் வரும் 24ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவு திரட்டுகிறார். அவருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர்களும் வரவுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
