திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!

Published On:

| By Mathi

VCK DMK Alliance pact1

2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு (விசிக) 8 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவருமான முதல்வருமான மு.க.ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோர் இன்று மார்ச் 24-ந் தேதி இந்த தொகுதி பங்கீட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தில், “”நடைபெற உள்ள 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் – விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு.தொல்.திருமாவளவன் அவர்களும் இன்று (24-3-2026) தொகுதி உடன்பாடுகள் குறித்து கலந்து பேசியதில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாட்டில் மொத்தம் 8 (எட்டு) சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதெனவும் – அவற்றில் 6 தனித் தொகுதிகளிலும் 2 பொது தொகுதிகளிலும் போட்டியிடுவதென முடிவு செய்யப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

திமுக கூட்டணியில் இதுவரையிலான தொகுதி பங்கீடு விவரம்:

  • காங்கிரஸ் 28
  • விசிக 8
  • சிபிஐ 5
  • சிபிஎம் 5
  • மதிமுக 4
  • முஸ்லிம் லீக் 2
  • மமக 2
  • கொமதேக 2

மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 56 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share