வைஃபை ஆன் செய்ததும், “எலக்ஷன் களத்துல ஒவ்வொரு நிமிஷமும் டென்ஷன்”தான் என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் ஆப்.
என்னய்யா..எந்த கட்சிக்கு டென்ஷன்?
திமுக கூட்டணியில சிபிஎம் கட்சியும் ஒப்பந்தத்துல கையெழுத்து போட்டிருச்சு இல்லையா.. 6 சீட் கேட்டு உறுதியா இருந்த சிபிஎம் ஸ்டாலின் பேசுன சென்டிமெண்ட் பேச்சுல திகைச்சு போய் இப்ப 5 சீட்டுக்கு ஓகே சொல்லி கையெழுத்து போட்டுட்டாங்க.. இதை பத்தி இன்னைக்கு டிஜிட்டல் திண்ணையில விரிவாகவே நாம சொல்லி இருக்கிறோம்யா..
இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகிட்டு இருக்கிற நேரத்துலதான் விசிக உயர்நிலை கூட்டத்துல திமுக கூட்டணியில டபுள் டிஜிட் சீட் கேட்போம்; 2028 ராஜ்யசபா தேர்தல்ல ஒரு சீட் கேட்போம்னு தீர்மானமும் போட்டிருக்காங்க..
இதை பத்தி நாம விசாரிச்சப்ப, சில நாட்களுக்கு முன்னாடி ஸ்டாலினை திருமா சந்திச்சு பேசுனாரு இல்லையா?
அப்ப ஸ்டாலின் கிட்ட திருமா ரொம்பவே ஆதங்கப்பட்டு, “கூட்டணியில இருக்கிற மத்த கட்சிகளுக்காக உங்க பேச்சுவார்த்தை குழுவில இருக்கிறவங்க பேசுறாங்க.. ஆனா எங்களுக்காக பேசத்தான் யாருமே இல்லையே”ன்னு வருத்தப்பட்டார்.
அதுக்கு பதில் சொன்ன ஸ்டாலின், “நீங்க ஏன் அப்படி நினைக்கிறீங்க.. அப்படி எல்லாம் நினைக்காதீங்க.. உங்களுக்காக ஆ.ராசா என்கிட்ட பேசிகிட்டுதானே இருக்கிறாரு.. ஏன் டிஆர் பாலு, எ.வ.வேலுவும் உங்களுக்காகதான் பேசுறாங்களே..” என்றார்
அப்புறமா தொகுதி எண்ணிக்கைகளை பத்தி பேச்சு வந்தப்ப, “ இந்த டைம் சீட்டை அதிகப்படுத்தி கொடுக்கனும்.. அதோட 1 ராஜ்யசபா சீட் எங்களுக்கு வேணும்”னு திருமா கோரிக்கை வைச்சார்.
இதுக்கு உடனே, “அதுக்கு என்ன கொடுத்துடலாம்… உங்களுக்காக தர்றோம்”னு ஸ்டாலின் சொல்ல திருமா ரொம்ப ஹேப்பியாகிட்டார்..
அதுக்கு பிறகு விசிக ரவிக்குமார், சிந்தனை செல்வன், திமுக டிஆர் பாலு, எவ வேலு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் எல்லாரும் அங்கே ஹால்ல உட்கார்ந்து பேசும் போது, “திருமாவோட லோக்சபா எம்பி பதவி காலம் 2029-ல்தான் முடியுது. ஆனா 2028-ல் ராஜ்யசபா எலக்ஷன் நடக்குது.. என்ன செய்ய முடியும்?”னு சீரியசா டிஸ்கஷன் செஞ்சாங்க..
அப்ப, “2029 ஜூனில்தான் திருமாவோட சிதம்பரம் எம்.பி. பதவி காலம் முடியுது.. அதுக்கு ஒரு வருஷத்துக்கு முன்னாடியே 2028 ஜூனில் ராஜ்யசபா எலக்ஷன் நடக்குது.. 2028-ல் லோக்சபா எம்பி பதவியை திருமா ராஜினாமா செஞ்சா உடனே சிதம்பரம் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடக்காது.. பொதுவாக 6 மாத காலத்துக்குள்ள இடைத் தேர்தல் நடத்துவாங்க.. ஆனா 2029-ல் லோக்சபா எலக்ஷன் நடக்க இருக்குது.. இப்படி கொஞ்ச காலம் மட்டுமே பொதுத்தேர்தலுக்கு இடைவெளி இருக்குன்னா 1 வருஷம் கூட இடைத் தேர்தலை மத்திய அரசு நடத்தாம இருக்கும்.. அடுத்து வர்ற ஜெனரல் எலக்ஷனோட தேர்தலை நடத்துவாங்க..அப்படிப் பார்த்தா 2029 பொதுத் தேர்தலோடுதான் சிதம்பரம் தொகுதிக்கு தேர்தலை நடத்துவாங்க.. அதனால இடைத் தேர்தலை பத்தியோ செலவை பத்தியோ யோசிக்க வேண்டியது இருக்காது”ன்னு பேசுனாங்க..
சிஎம் கொடுத்த நம்பிக்கையிலதான் இப்ப டபுள் டிஜிட் சீட், ராஜ்யசபா சீட் தீர்மானம்னு போட்டிருக்கு விசிக.. தமிழகத்துல 8, புதுவையில 2ன்னு டபுள் டிஜிட் தரப் போகுதா திமுக? ராஜ்யசபா சீட் பத்தி இப்பவே ஒப்பந்தத்துல சொல்வாங்களா? இல்லையான்னும் விவாதம் நடந்துகிட்டே இருக்கு என்றபடியே டைப் செய்துவிட்டு ஆப் லைன்னுக்குள் போனது வாட்ஸ் ஆப்.
