‘தடுமாற்றம்’தன்னால் வந்ததல்ல – அமைச்சர் வன்னி அரசுக்கு ஆ.ராசா பதிலடி

Published On:

| By Pandeeswari Gurusamy

அரைவேக்காடு’ களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ தேவையற்ற கைதை’ கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

நாதக வேட்பாளர் கார்த்திகா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக, அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

ADVERTISEMENT

இதுகுறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கார்த்திகா அவர்கள் தி.மு.கழகத்தையும் அதன் கொள்கைத் தலைவர்களையும் விமர்சனம் செய்த தருணங்களில், அதைக் கொள்கை வழிநின்று தக்க பதிலளித்து தெளிவை ஏற்படுத்துவோம் என்ற வகையில் அணுகினோமே தவிர, பெண் தலைவர்களைச் சிறையில் அடைத்து வாய்ப்பூட்டு போட நாங்கள் நினைத்தது இல்லை. ஆனால், சகிப்புத்தன்மையும் ஜனநாயக உணர்வும் இல்லாத சர்வாதிகார அரசாகத் த.வெ.க. அரசு நடந்துகொள்கிறது என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்நிலையில் விசிக துணைப்பொதுச்செயலாளரும், சமூக நீதித்துறை அமைச்சருமான வன்னி அரசு கோட்பாட்டு வழியிலும் தனிநபர் தாக்குதலிலும் ஈடுபட்ட பிழைப்புவாதி சீமானின் இழிவான அரசியலை திமுக மறந்திருக்கலாம். விடுதலைச் சிறுத்தைகளைப் பொறுத்தவரை தந்தை பெரியாரையும் புரட்சியாளர் அம்பேத்கரையும் ஏற்றுக்கொண்டவர்களைத்தான் ஏற்கும்; பார்ப்பனிய அடிமைகளை ஏற்காது. இப்போது திமுகவுக்கும் வெட்கமில்லை; நாதகவுக்கும் வெட்கமில்லை என கடுமையாக விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

இதற்கு பதிலடி கொடுக்கம் வகையில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா தனது எக்ஸ் பதிவில்,”‘அரைவேக்காடு’ களின் ஆட்சியில் ஒரு அரசியல் கட்சி பெண் நிர்வாகியின் ‘ தேவையற்ற கைதை’ கண்டிப்பது அக்கட்சியின் கொள்கைகளையும் விமர்சனங்களையும் ஆதரிப்பது ஆகாது என்பதை புரிந்து கொள்ள முடியாதவரல்ல நீங்கள்!

இந்தத் ‘ தடுமாற்றம் ’ தன்னால் வந்ததல்ல;
‘ வேலை ‘ செய்கின்ற இடத்தால் விளைந்த நோய் – Occupational Hazard! வன்னி அரசு” என தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share