தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவாகியது.
விஜய் ஆட்சி அமைக்க திமுக கூட்டணியில் இப்போதும் நீடிக்கும் சிபிஐ, சிபிஎம், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் 13 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்துள்ளனர். இதனையடுத்து ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் நேற்று விஜய்க்கு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இன்று காலை நேரு உள் விளையாட்டரங்கத்தில் விஜய் பதவி ஏற்பு விழா தொடங்கியது. பதவியேற்பு விழாவில் முதலில் வந்தே மாதரம் பாடலும், இரண்டாவதாக தேசிய கீதமும் பாடப்பட்டது. மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழக முதல்வராக ஜோசப் விஜய் முதல்வராக பதவி ஏற்றார். ஆளுநர் அர்லேகர் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
