தமிழகத்தின் முதல்வராக விஜய் பதவியேற்கும் விழாவுக்கு வந்த நடிகை திரிஷாவுக்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
விஜய் பதவியேற்பு விழா நடைபெறும் சென்னை நேரு விளையாட்டரங்கத்துக்கு புறப்படும் முன்பாக, “ஆவலோடு காத்திருக்கிறேன்” என திரிஷா கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து நேரு விளையாட்டரங்கம் வந்த திரிஷாவை, விஜய் குடும்பத்தினர் ஆரத் தழுவி வரவேற்றனர்.

மிகவும் உற்சாகமாக காணப்பட்ட திரிஷா அரசியல்வாதிகளைப் போல தவெக தொண்டர்களைப் பார்த்து கையை உயர்த்தி அசைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அவரைப் பார்த்ததும் தவெக தொண்டர்களும் ஆராவாரம் செய்தனர்.
