விஜய் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்த ஆளுநர்! நாளை பதவியேற்பு- மே 13-க்குள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவு!

Published On:

| By Mathi

Vijay Chiief Minister

தமிழக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் ஆர்வி அர்லேகர் அழைப்பு விடுத்துள்ளார். இதனையடுத்து தமிழகத்தின் புதிய முதல்வராக சி. ஜோசப் விஜய் நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சட்டசபையில் மே 13-ந் தேதிக்குள் முதல்வர் விஜய் தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. 234 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தமிழக சட்டசபையில் பெரும்பான்மைக்கு 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. இதில் விஜய் 2 தொகுதிகளில் வென்றதால் ஒரு தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வார். இதனால் சட்டசபையின் பலம் 233. இதனடிப்படையில் பெரும்பான்மைக்கு 117 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

ADVERTISEMENT

தற்போதைய நிலையில் விஜய்க்கு காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் 13 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதனால் விஜய்க்கு மொத்தம் 120 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்திருக்கிறது.

இதனையடுத்து இன்று மாலை ஆளுநர் அர்லேகரை சந்தித்து 120 எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதங்களைக் கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய். இதனையேற்று விஜய்யை முதல்வராக ”நியமித்துள்ளதாக” ஆளுநர் அர்லேகர் அறிவித்துள்ளார்.

ADVERTISEMENT

மேலும் விஜய் மற்றும் அவரது அமைச்சரவை நாளை (மே 10) காலை 10 மணிக்கு பதவியேற்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு நிகழ்வில் விஜய்யுடன் அமைச்சர்களும் பதவியேற்கின்றனர்.

இதனையடுத்து தமிழக சட்டசபையில் மே 13-ந் தேதிக்குள் முதல்வர் விஜய் தமது பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டும் என்றும் ஆளுநர் அர்லேகர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share