தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை சந்திக்க ஆளுநர் அர்லேகர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் 4-வது முறையாக ஆளுநரை சந்திக்க சென்ற விஜய் பாதி வழியிலேயே வீடு திரும்பியதால் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தவெக ஆட்சி அமைக்க இன்று விசிக, முஸ்லிம் லீக் கட்சிகளும் ஆதரவு அளித்தன. இதனால் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதற்கான எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்தது.
விசிக மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவு கடிதங்களைப் பெற்றுக் கொண்டு பட்டினப்பாக்கத்தில் இருந்து கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு விஜய்யும் தவெக நிர்வாகிகளும் சென்றனர். ஆனால் திடீரென பாதி வழியிலேயே விஜய் வீடு திரும்பினார்.
விஜய்யை சந்திக்க ஆளுநர் அர்லேகர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது.
