அதிமுகவில் பரபரப்பு.. சிவி சண்முகம் தலைமையில் 17 எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை- எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் பங்கேற்பு!

Published On:

| By Mathi

AIADMK MLAs

அதிமுகவின் மூத்த தலைவரான சிவி சண்முகம் தலைமையில் அக்கட்சியின் 17 எம்.எல்.ஏக்கள் தனியே ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் அதிமுகவின் மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி, சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

சென்னையில் இன்று காலை அதிமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், “திமுக ஆதரவுடன் விசிக தலைவர் திருமாவளவன் முதல்வராவதற்கு நாம் ஆதரவு தர வேண்டும்; முதல்வர் பதவியை திருமாவளவனுக்கான எடப்பாடி பழனிசாமி விட்டுத் தர வேண்டும்” என அதிமுக மூத்த தலைவர்களான எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி. விஜயபாஸ்கர் வலியுறுத்தினர் . ஆனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திமுக- அதிமுக ஆதரவுடன் திருமாவளவன் முதல்வராக்கப்படும் முயற்சி நிறைவேறவில்லை.

ADVERTISEMENT

இந்த நிலையில் தற்போது சிவி சண்முகம் தலைமையில் அதிமுகவின் 17 எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்துகின்றனர். இதில் எஸ்பி வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share