விசிகவின் 2 எம்.எல்.ஏக்கள் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையான 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு கிடைத்துள்ளது.
சட்டசபை தேர்தலில் தவெகவுக்கு 108 எம்.எல்.ஏக்கள், இதில் விஜய் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றார். இதனால் ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறார். இதனையடுத்து தவெகவின் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 107.

சட்டசபையில் மொத்தம் 234 இடங்கள். விஜய்யின் ஒரு தொகுதி ராஜினாமாவால் சட்டசபையின் மொத்த பலம் 233. இதில் பெரும்பான்மைக்கு தேவை 117 எம்.எல்.ஏக்கள்.
தவெக -107
காங்கிரஸ் -5
சிபிஐ- 2
சிபிஎம் -2
விசிக -2
என மொத்தம் 118 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தவெக தலைவர் விஜய்க்கு கிடைத்துள்ளது. இதனையடுத்து விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் முறைப்படி அழைப்பு விடுப்பார். இதனைத் தொடர்ந்து விஜய், தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பதவியேற்பார்.
