துணை முதல்வர், அமைச்சர் பதவிகள் வேண்டாம்.. வெளியில் இருந்து விஜய்க்கு ஆதரவு தரும் திருமா

Published On:

| By Mathi

Vijay Thirumavalavan

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு வெளியில் இருந்து விசிக எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் ஆதரவு தருவது என அக்கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் முடிவெடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க விசிகவின் ஆதரவைக் கேட்டிருந்த விஜய், “திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தருகிறோம்.. விரும்பிய அமைச்சரவை துறைகளைத் தருகிறோம்; திருமாவளவன் விரும்பினால் நான் ராஜினாமா செய்யக் கூடிய திருச்சி கிழக்கு அல்லது பெரம்பூர் தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிடலாம்” என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த நிலையில் நேற்று திருமாவளவன் நடத்திய விசிகவின் உயர்நிலைக் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

இக்கூட்டத்தின் அடிப்படையில், விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு தருவது என திருமாவளவன் முடிவெடுத்துள்ளார். அதே நேரத்தில் ”தமக்கு துணை முதல்வர் பதவியோ, தமது கட்சி எம்.எல்.ஏக்களுக்கு அமைச்சர் பதவிகளோ எதுவும் வேண்டாம் என்றும் விஜய் ஆட்சிக்கு வெளியில் இருந்து விசிக எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தருவர்” என்றும் திருமாவளவன் முடிவெடுத்துள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share