‘எங்க வீட்டு பையன்’.. முதல்வர் விஜய்க்கு பிரேமலதா சீமான் வாழ்த்துகள்!

Published On:

| By Mathi

Chiief Minister Vijay Premalatha1

தமிழகத்தின் முதல்வராக பதவியேற்கும் தவெக தலைவர் விஜய்க்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ. வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிரேமலதா வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டு பையன் தம்பி விஜய்-க்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ADVERTISEMENT

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும் என அன்பு தம்பி விஜய்க்கு கேப்டன் அவர்களின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாட்டு முதல்வராகப் பொறுப்பேற்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அவர்களுக்கும், அவரது அமைச்சரவையினருக்கும் உளப்பூர்வமான வாழ்த்துகள்! திமுக-அதிமுக அல்லாத ஒரு கட்சி பல்லாண்டுகள் கழித்து தமிழகத்தை ஆளவிருப்பதில் மகிழ்கிறேன்” என கூறியுள்ளார்.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share