ஆற்றில் அடித்து செல்லப்பட்ட அம்மன் கோயில்!

Published On:

| By srinivasan

கோதாவரி கரையில் அமைந்திருந்த வனதுர்க்கை அம்மன் கோயில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவ மழை காரணமாக மஹாராஷ்டிரா, அசாம், தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்களில், கடந்த சில வாரங்களாக கன மழை பெய்து வருகிறது. தொடர் மழையின் காரணமாக பல்வேறு கிராமங்களும் நீரால் சூழ்ந்துள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் ஆந்திரா மாநிலம் கோதாவரி ஆறு பாயும் 6மாவட்டங்களில், 300 க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 220 க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள புருஷோத்தப்பட்டினத்தில் கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்திருந்த வனதுர்க்கை அம்மன் கோயில் நீரில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்தான் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

பக்தர்கள் யாரும் கோயிலில் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.

க.சீனிவாசன்

ADVERTISEMENT
Photo of author
srinivasan
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share